Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 7

7.1 வெளியீட்டுக் குறிப்புகள்

Red Hat Enterprise Linux 7 க்கான வெளியீட்டுக் குறிப்புகள்

Red Hat வாடிக்கையாளர் உள்ளடக்க சேவைகள்

சட்டஅறிக்கை

Copyright © 2015 Red Hat, Inc.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
MySQL® is a registered trademark of MySQL AB in the United States, the European Union and other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
RaleighNC 27606-2072 USA
Phone: +1 919 754 3700
Phone: 888 733 4281
Fax: +1 919 754 3701

சுருக்கம்

வெளியீட்டுக் குறிப்புகளானது Red Hat Enterprise Linux 7.1 வெளியீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள முக்கியமான அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை ஆவணப்படுத்துகிறது. Red Hat Enterprise Linux 6 மற்றும் 7 க்கு இடையிலான மாற்றங்கள் பற்றிய விரிவான தகவலுக்கு, இடப்பெயர்ப்புத் திட்டமிடல் வழிகாட்டியைப் பார்க்கவும்.
ஒப்புகைகள்
Red Hat உலகளாவிய ஆதரவு சேவைகள், Red Hat Enterprise Linux 7 ஐ சோதனை செய்வதில் தங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ஸ்டெர்லிங் அலெக்ஸான்டர் மற்றும் மைக்கேல் எவெரெட் ஆகியோருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்னுரை
I. புதிய அம்சங்கள்
1. கட்டமைப்புகள்
2. நிறுவலும் பூட்டிங்கும்
3. சேமிப்பகம்
4. கோப்பு முறைகள்
5. கெர்னல்
6. மெய்நிகராக்கம்
7. க்ளஸ்டரிங்
8. கம்பைலர் மற்றும் கருவிகள்
9. பிணையமாக்கல்
10. Docker வடிவமைப்பில் Linux கன்டெய்னர்கள்
11. அங்கீகாரம் மற்றும் இடைசெயல் தன்மை
12. பாதுகாப்பு
13. டெஸ்க்டாப்
14. ஆதரிக்கக்கூடிய தன்மை மற்றும் பராமரிப்பு
15. Red Hat மென்பொருள் தொகுப்புகள்
II. சாதன இயக்கிகள்
16. சேமிப்பக இயக்கி புதுப்பிப்புகள்
17. பிணைய இயக்கி புதுப்பிப்புகள்
18. கிராஃபிக்ஸ் இயக்கி புதுப்பிப்புகள்
A. மீள்பார்வைவரலாறு

முன்னுரை

Red Hat Enterprise Linux சிறு வெளியீடானது தனித்தனி மேம்படுத்தல்கள், பாதுகாப்பு மற்றும் வழுத் திருத்தங்களின் தொகுப்பாகும். Red Hat Enterprise Linux 7.1 வெளியீட்டுக் குறிப்புகள் Red Hat Enterprise Linux 7 இயக்க முறைமைகள் மற்றும் இந்த சிறு வெளியீட்டுடன் வரும் பயன்பாடுகளின் புதிய அம்சங்கள், முக்கிய மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் பற்றி விவரிக்கிறது. அத்துடன், Red Hat Enterprise Linux 7.1 வெளியீட்டுக் குறிப்புகள் Red Hat Enterprise Linux 7.1 இல் உள்ள அறியப்பட்ட சிக்கல்களைப் பற்றியும் ஆவணப்படுத்துகிறது.

முக்கியம்

இணையத்தில் இங்கு கிடைக்கின்ற Red Hat Enterprise Linux 7.1 வெளியீட்டுக் குறிப்புகள் ஆவணமே இறுதியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகக் கருதப்பட வேண்டும். இந்த வெளியீடு தொடர்பான கேள்விகள் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களது Red Hat Enterprise Linux பதிப்புக்குரிய, இணையத்திலுள்ள வெளியீட்டுக் குறிப்புகளைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தெரிந்த சிக்கல்கள்

தெரிந்த சிக்கல்கள் பற்றிய விளக்கங்களுக்கு Red Hat Enterprise Linux 7.1 வெளியீட்டுக் குறிப்பின் ஆங்கிலப் பதிப்பைக் காணவும்.
Red Hat Enterprise Linux வாழ்க்கைச் சுழற்சி பற்றிய தகவலுக்கு, https://access.redhat.com/support/policy/updates/errata/ ஐப் பார்க்கவும்.

பகுதி I. புதிய அம்சங்கள்

பாடம் 1. கட்டமைப்புகள்

பின்வரும் கட்டமைப்புகளில், Red Hat Enterprise Linux 7.1 ஆனது ஒற்றை கருவித் தொகுப்பாக கிடைக்கும்[1]
  • 64-பிட் AMD
  • 64-பிட் Intel
  • IBM POWER7 மற்றும் POWER8 (பிக் என்டியன்)
  • IBM POWER8 (லிட்டில் என்டியன்) [2]
  • IBM System z [3]
இந்த வெளியீட்டில், சேவையகங்கள் மற்றும் கணினிகள் இரண்டுக்குமான மேம்படுத்தல்களை Red Hat ஒருங்கே கொண்டு வழங்குகிறது, அத்துடன் Red Hat திறமூல அனுபவத்தையும் வழங்குகிறது.

1.1. POWER, லிட்டில் என்டியனுக்கான Red Hat Enterprise Linux

Red Hat Enterprise Linux 7.1 இல், IBM POWER8 செயலிகளைப் பயன்படுத்தும் IBM Power Systems சேவையகங்களில் லிட்டில் என்டியன் ஆதரவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் Red Hat Enterprise Linux 7 இல், IBM Power Systems க்கு பிக் என்டியன் மட்டுமே ஆதரிக்கப்பட்டது. POWER8-அடிப்படையிலான சேவையகங்களில் லிட்டில் என்டியனுக்கான ஆதரவின் நோக்கம், 64-பிட் Intel இணக்கமுள்ள கணினிகளுக்கும் (x86_64) IBM Power Systems கணினிகளுக்கும் இடையே பயன்படுத்தக்கூடிய தன்மையை மேம்படுத்துவதே ஆகும்.
  • Red Hat Enterprise Linux ஐ IBM Power Systems சேவையகங்களில் லிட்டில் என்டியன் பயன்முறையில் நிறுவுவதற்கு என தனி நிறுவல் ஊடகம் வழங்கப்படுகிறது. இந்த ஊடகம் Red Hat வாடிக்கையாளர் வலைவாசலின் பதிவிறக்கம் எனும் பிரிவில் கிடைக்கும்.
  • IBM POWER8 செயலி-அடிப்படையிலான சேவையகங்கள் மட்டுமே Red Hat Enterprise Linux for POWER, லிட்டில் என்டியனுடன் ஆதரிக்கப்படும்.
  • தற்போது, Red Hat Enterprise Linux for POWER, லிட்டில் என்டியன் Red Hat Enteprise Virtualization for Power இன் கீழான KVM விருந்தினராக மட்டுமே ஆதரிக்கப்படுகிறது. பேர் மெட்டல் வன்பொருளில் நிறுவ தற்போது ஆதரவில்லை.
  • நிறுவல் ஊடகத்திலும் பிணைய பூட் செயலுக்கும் GRUB2 பூட் லோடர் பயன்படுத்தப்படுகிறது. GRUB2 ஐப் பயன்படுத்தி, IBM Power Systems கிளையன்களுக்கு, பிணைய பூட் சேவையகத்தை அமைப்பதற்கான வழிமுறைகள் நிறுவல் வழிகாட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • IBM Power Systems க்கான அனைத்து மென்பொருள் தொகுப்புகளும் Red Hat Enterprise Linux for POWER இன் லிட்டில் என்டியன் மற்றும் பிக் என்டியன் இரு வகைக்கும் கிடைக்கும்.
  • Red Hat Enterprise Linux for POWER, லிட்டில் என்டியனுக்காக கட்டமைக்கப்பட்ட தொகுப்புகள் ppc64le கட்டமைப்புக் குறியீட்டைப் பயன்படுத்துகின்றன - எடுத்துக்காட்டாக gcc-4.8.3-9.ael7b.ppc64le.rpm.


[1] Red Hat Enterprise Linux 7.1 நிறுவலானது 64-பிட் வன்பொருளில் மட்டுமே ஆதரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Red Hat Enterprise Linux 7.1 ஆல் Red Hat Enterprise Linux இன் முந்தைய பதிப்புகள் உட்பட, 32-பிட் இயக்க முறைமைகளை மெய்நிகர் கணினிகளாக இயக்க முடியும்.
[2] இப்போது Red Hat Enterprise Linux 7.1 (லிட்டில் என்டியன்) Red Hat Enteprise Virtualization for Power மற்றும் PowerVM ஹைப்பர்வைசர்களின் கீழுள்ள KVM விருந்தினராக மட்டுமே ஆதரிக்கப்படும்.
[3] IBM zEnterprise 196 வன்பொருள் அல்லது அதற்கடுத்த பதிப்புகளையே Red Hat Enterprise Linux 7.1 ஆதரிக்கும் என்பதையும், IBM System z10 mainframe கணினிகள் இனி ஆதரிக்கப்படாது மற்றும் அவை Red Hat Enterprise Linux 7.1 ஐத் துவக்காது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

பாடம் 2. நிறுவலும் பூட்டிங்கும்

2.1. நிறுவி

Red Hat Enterprise Linux நிறுவி Anaconda, Red Hat Enterprise Linux 7.1 க்கான நிறுவல் செயலை மேம்படுத்துவதற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இடைமுகம்

  • இப்போது வரைகலை நிறுவி இடைமுகத்தில் கூடுதலாக ஒரு திரை உள்ளது, இதைக் கொண்டு நிறுவலின் போது Kdump கெர்னல் க்ராஷ் டம்பிங் செயலம்சத்தை அமைவாக்கம் செய்யலாம். முன்னர், நிறுவலுக்குப் பிறகு firstboot கருவி நிரலைக் கொண்டே இதை அமைவாக்கம் செய்ய முடியும், ஆனால் அது வரைகலை இடைமுகமில்லாமல் அணுக முடியாத நிரலாகும். ஆனால் இப்போது வரைகலை இடைமுகம் இல்லாத கணினிகளில், நிறுவலின் போதே நீங்கள் Kdump ஐ அமைவாக்கம் செய்யலாம். புதிய திரையை பிரதான நிறுவி மெனுவிலிருந்து அணுகலாம் (நிறுவல் விவரச்சுருக்கம்).
    புதிய Kdump திரை
    The new Kdump screen.

    படம் 2.1. புதிய Kdump திரை


  • பயனர் அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் விதத்தில், கைமுறைப் பகிர்வாக்கத் திரை மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையின் சில கட்டுப்பாடுகள் இடம் மாற்றப்பட்டுள்ளன.
    புதிய கைமுறை பகிர்வாக்கத் திரை
    The new Manual Partitioning screen.

    படம் 2.2. புதிய கைமுறை பகிர்வாக்கத் திரை


  • இப்போது நீங்கள் நிறுவியின் பிணையம் & வழங்கிபெயர் திரையில், ஒரு பிணைய பிரிட்ஜை அமைவாக்கம் செய்ய முடியும். அதைச் செய்ய, இடிஅமுகத்தின் பட்டியலின் கீழ்ப்பகுதியில் உள்ள + பொத்தானைச் சொடுக்கி, மெனுவிலிருந்து பிரிட்ஜ் என்பதைத் தேர்ந்தெடுத்து, அதன் பின் வரும்பிரிட்ஜ் இணைப்பைத் திருத்துதல் உரையாடலைக் கொண்டு பிரிட்ஜ் இணைப்பை அமைவாக்கம் செய்யவும். இந்த உரையாடலை NetworkManager வழங்குகிறது, இது Red Hat Enterprise Linux 7.1 பிணையமாக்கல் வழிகாட்டியில் முழுவதுமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
    பிரிட்ஜ் அமைவாக்கத்தில் புதிய பல Kickstart விருப்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. விவரங்கள் கீழே.
  • இப்போது நிறுவியானது, பதிவுகளைக் காண்பிக்க பல பணியகங்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில், பதிவுகள் மெய்நிகர் பணியகம் 1 இல் (tty1) tmux இல் உள்ளன. நிறுவலின் போது பதிவுகளைக் காண, tmux க்கு மாறுவதற்காக Ctrl+Alt+F1 ஐ அழுத்தி, பிறகு வெவ்வேறு சாளரங்களுக்கிடையே மாறுவதற்கு Ctrl+b X ஐப் (திரையின் அடிப்பகுதியில் காண்பிக்கப்படும் குறிப்பிட்ட சாளரத்தின் எண்ணை X க்கு பதில் இடவும்) பயன்படுத்தவும்.
    மீண்டும் வரைகலை இடைமுகத்திற்குச் செல்ல, Ctrl+Alt+F6 ஐ அழுத்தவும்.
  • இப்போது, Anaconda நிரலின் கட்டளைவரி இடைமுகத்தில் முழு உதவியும் சேர்க்கப்பட்டுள்ளது. உதவியைக் காண, anaconda தொகுப்பு நிறுவப்பட்டுள்ள கணினியில் anaconda -h கட்டளையைப் பயன்படுத்தவும். நிறுவப்படாத கணினி ஒன்றில் நிறுவியை இயக்க, கட்டளைவரி இடைமுகம் பயன்படுகிறது. இது வட்டு படிம நிறுவல்களுக்கு உகந்தது.

கிக்ஸ்டார்ட் கட்டளைகளும் விருப்பங்களும்

  • logvol கட்டளையில் --profile= எனும் புதிய விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. தருக்கத் தொகுதிகளில் பயன்படுத்த வேண்டிய அமைவாக்க தனியமைப்பின் பெயரைக் குறிப்பிட இந்த விருப்பத்தைப் பயன்படுத்தவும். இதைப் பயன்படுத்தினால், தருக்கத் தொகுதிக்கான மீத்தரவிலும் இந்தப் பெயர் சேர்க்கப்படும்.
    முன்னிருப்பாக, முன்னிருப்பு மற்றும் மென் செயல்திறன் ஆகிய தனியமைப்புகள் கிடைக்கும். அவை /etc/lvm/profile கோப்பகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவலுக்கு lvm(8) கையேட்டுப் பக்கத்தைப் பார்க்கவும்.
  • autostep Kickstart கட்டளையின் --autoscreenshot விருப்பமானது சரி செய்யப்பட்டுவிட்டது, இப்போது இக்கட்டளை விருப்பம், ஒவ்வொரு திரையிலிருந்தும் வெளியேறும் போது, அவை ஒவ்வொன்றின் திரைப்பிடிப்பையும் /tmp/anaconda-screenshots கோப்பகத்தில் சரியாகச் சேமிக்கிறது. நிறுவல் முடிந்ததும், இந்தத் திரைப்பிடிப்புகள் into /root/anaconda-screenshots க்கு நகர்த்தப்படுகின்றன.
  • இப்போது liveimg கட்டளையானது tar கோப்புகள் மற்றும் வட்டு பிம்பங்களிலிருந்து நிறுவுவதை ஆதரிக்கிறது.tar காப்பகமானது நிறுவல் ஊடக ரூட் கோப்புமுறைமையைக் கொண்டிருக்க வேண்டும், கோப்புப் பெயரானது .tar, .tbz, .tgz, .txz, .tar.bz2, .tar.gz அல்லது .tar.xz என்றே முடிவுற வேண்டும்.
  • network கட்டளைக்கு, பிணைய பிரிட்ஜ்களை அமைவாக்கம் செய்வதற்கான பல புதிய விருப்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:
    • --bridgeslaves=: இந்த விருப்பத்தைப் பயன்படுத்தினால், --device= விருப்பத்தின் மூலம் குறிப்பிடும் சாதனப் பெயரைக் கொண்ட பிணைய பிரிட்ஜ் உருவாக்கப்படும், --bridgeslaves= விருப்பத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சாதனங்கள் பிரிட்ஜில் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டு:
      network --device=bridge0 --bridgeslaves=em1
    • --bridgeopts=: பிரிட்ஜாக்கப்பட்ட இடைமுகத்திற்கான அளவுருக்களின் காற்புள்ளியால் பிரித்த பட்டியல் - கட்டாயமற்றது. இதற்கு stp, priority, forward-delay, hello-time, max-age மற்றும் ageing-time ஆகிய மதிப்புகள் உள்ளன. இந்த அளவுருக்கள் பற்றிய தகவலுக்கு nm-settings(5) கையேட்டுப் பக்கத்தைப் பார்க்கவும்.
  • autopart கட்டளையில் --fstype எனும் புதிய விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. Kickstart கோப்பைக் கொன்டு தானியங்கு பகிர்வாக்கம் செய்யும்போது, இதைக் கொண்டு முன்னிருப்பு கோப்பு முறைமை வகையை (xfs) மாற்றலாம்.
  • Docker ஆதரவைச் சிறப்பிப்பதற்காக, Kickstart இல் புதிய பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் இவையும் அடங்கும்:
    • repo --install: இந்தப் புதிய விருப்பமானது, கொடுக்கப்படும் தொகுப்பதிவக அமைவாக்கத்தை, நிறுவிய கணினியில் /etc/yum.repos.d/ கோப்பகத்தில் சேமித்து வைக்கிறது. இந்த விருப்பத்தைப் பயன்படுத்தாவிட்டால், Kickstart கோப்பில் அமைவாக்கம் செய்யப்பட்டிருக்கும் தொகுப்பதிவகம் நிறுவலின்போது மட்டுமே கிடைக்குமேயன்றி, நிறுவிய கணினியில் கிடைக்காது.
    • bootloader --disabled: இந்த விருப்பமானது பூட் லோடர் நிறுவாமல் தடுக்கும்.
    • %packages --nocore: @core தொகுப்புக் குழுவை நிறுவாதபடி கணினியைத் தடுக்கின்ற, %packages எனும் Kickstart கோப்புப் பிரிவுக்கான ஒரு புதிய விருப்பம். இதனால், கன்டெய்னர்களைப் பயன்படுத்த ஏற்ற மிகச் சிறிய கணினிகளை நிறுவ முடிகிறது.
    இங்கு விவரிக்கப்பட்டுள்ள விருப்பங்கள், Docker கன்டெய்னர்களுடன் சேர்த்துப் பயன்படுத்தினால் மட்டுமே பயனளிக்கும், வழக்கமான தேவைக்காக செய்யும் நிறுவலில் இந்த விருப்பங்களைப் பயன்படுத்தினால் கணினி நிலைத்தன்மை பாதிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

Anaconda என்ட்ராபி

  • Red Hat Enterprise Linux 7.1 இல், சாத்தியமுள்ள பாதுகாப்பு சிக்கல்களைத் தடுப்பதற்காக, வட்டை மறைகுறியாக்கம் செய்ய வேண்டி இருந்தால், Anaconda பயன்பாடு என்ட்ராப்பி பெறுகிறது, குறைந்த அளவு என்ட்ராப்பி கொண்ட தரவுக்கு மறைகுறியாக்கப்பட்ட வடிவமைப்பை உருவாக்குவதன் மூலம் இது செய்யப்படலாம். ஆகவே, மறைகுறியாக்கம் செய்ட வடிவமைப்பை உருவாக்கும் போது Anaconda பயன்பாடு காத்திருக்கும், அத்துடன் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வழிகளை பயனருக்குப் பரிந்துரைக்கும்.

வரைகலை நிறுவியில் உள்ளமைந்த உதவி

இப்போது நிறுவியின் வரைகலை இடைமுகத்திலுள்ள மற்றும் Initial Setup பயன்பாட்டில் உள்ள ஒவ்வொரு திரையும் Help மேல் வலது மூலையில் ஒரு பொத்தானைக் கொண்டுள்ளன. இந்த பொத்தானைச் சொடுக்கினால், தற்போதுள்ள திரைக்கு தொடர்புடைய நிறுவல் வழிகாட்டி பிரிவைத் திறக்கும், இது Yelp உதவி உலாவியைக் கொண்டு திறக்கப்படும்.

2.2. பூட்டை ஏற்றி

இப்போது IBM Power Systems கணினிகளுக்கான நிறுவல் ஊடகமானது, முன்னர் வழங்கப்பட்ட yaboot க்கு பதில் GRUB2 பயன்பாட்டைப் பயன்படுத்துகிறது. Red Hat Enterprise Linux இன் பெரிய என்டியன் வகைகளுக்காக, சக்திக்காக, GRUB2 பரிந்துரைக்கப்படுவது, ஆனால் yaboot பயன்பாட்டையும் பயன்படுத்தலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறூ என்டியன் வகைக்கு பூட் செய்வதற்கு GRUB2 தேவை.
GRUB2 ஐப் பயன்படுத்தி, IBM Power Systems கணினிகளுக்கு, பிணைய பூட் சேவையகத்தை அமைப்பதற்கான வழிமுறைகள் நிறுவல் வழிகாட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடம் 3. சேமிப்பகம்

LVM தேக்ககம்

Red Hat Enterprise Linux 7.1 இலிருந்து LVM தேக்ககம் முழுவதும் ஆதரிக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள், சிறிய வேகமான சாதனத்தை பெரிய மெதுவான சாதனங்களுக்கு தேக்ககமாகப் பயன்படுத்தக்கூடிய தருக்கவியல் தொகுதிகளை உருவாக்க முடியும். தேக்கக தருக்கவியல் தொகுதிகளை உருவாக்குவது பற்றிய தகவலுக்கு lvm(8) உதவிப்பக்கத்தைப் பார்க்கவும்.
தேக்கக தருக்கவியல் தொகுதிகளின் (LV) பயன்பாட்டிலான பின்வரும் கட்டுப்பாடுகளை நினைவில் கொள்ளவும்:
  • தேக்கக LV உயர் மட்ட சாதனமாக இருக்க வேண்டும். அதை மென் தொகுப்பக LV ஆக, RAID LV இன் ஒரு பிம்பமாக அல்லது வேறு ஏதேனும் உபLV வகையாகப் பயன்படுத்தக்கூடாது.
  • தேக்கக LV ஐ உருவாக்கிய பிறகு, அவற்றின் பண்புகளை மாற்ற முடியாது. தேக்கக பண்புகளை மாற்ற, அதை அகற்றிவிட்டு, விரும்பும் பண்புடன் மீண்டும் புதிய தேக்ககத்தை உருவாக்க வேண்டும்.

libStorageMgmt API உடனான சேமிப்பக தரவணி நிர்வாகம்

Red Hat Enterprise Linux 7.1 இல், சேமிப்பக அணிவரிசை சார்பற்ற API ஆன libStorageMgmt முழுவதும் ஆதரிக்கப்படுகிறது. வழங்கப்படும் API நிலைத்தன்மை கொண்டது, இசைவானது மற்றும் டெவலப்பர்கள் நிரலாக்கத்தில் வெவ்வேறு சேமிப்பக அணிவரிசைகளை நிர்வகிக்கவும் வழங்கப்படும் வன்பொருள் முடுக்கப்பட்ட அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. கணினி நிர்வாகிகள் சேமிப்பகத்தை கைமுறையாக அமைவாக்கம் செய்து, உடன் சேர்க்கப்பட்டுள்ள கட்டளை வரி இடைமுகத்தைக் கொண்டு சேமிப்பக நிர்வாகப் பணிகளை தனியக்கமாக்க libStorageMgmt ஐப் பயன்படுத்தலாம். Targetd செருகுநிரலானது முழுமையாக ஆதரிக்கப்படவில்லை, இன்னும் அது தொழில்நுட்ப மாதிரியாகவேஎ உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
  • NetApp Filer (ontap 7-Mode)
  • Nexenta (nstor 3.1.x only)
  • பின்வரும் விற்பனையாளர்களுக்கான SMI-S:
    • HP 3PAR
      • OS வெளியீடு 3.2.1 அல்லது அதற்குப் பிறகானது
    • EMC VMAX மற்றும் VNX
      • Solutions Enabler V7.6.2.48 அல்லது அதற்குப் பிறகானது
      • SMI-S Provider V4.6.2.18 ஹாட்ஃபிக்ஸ் கிட் அல்லது அதற்குப் பிறகானது
    • HDS VSP அணிவரிசை உட்பொதிக்கப்படாத வழங்குநர்
      • Hitachi Command Suite v8.0 அல்லது அதற்கடுத்த பதிப்பு
libStorageMgmt பற்றிய கூடுதல் தகவலுக்கு, சேமிப்பக நிர்வாக வழிகாட்டியிலுள்ள தொடர்புடைய பிரிவுகளைப் பார்க்கவும்.

LSI Syncro க்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல், megaraid_sas இயக்கியில் ஒரு குறியீடு சேர்க்கப்பட்டுள்ளது, அது LSI Syncro CS அதிகம் கிடைக்கும் தன்மை கொண்ட நேரடி இணைவு சேமிப்பக (HA-DAS) அடாப்ட்டர்களை இயக்குகிறது. முன்பு இயக்கப்பட்டுள்ள அடாப்ட்டர்களுக்கு megaraid_sas இயக்கி முழுமையாக ஆதரிக்கப்படும், இந்நிலையில் Syncro CS க்கு இந்த இயக்கியைப் பயன்படுத்தும் அம்சம், தொழில்நுட்ப முன்னோட்டமாக கிடைக்கிறது. இந்த அடாப்ட்டருக்கான ஆதரவு LSI, உங்கள் கணினி ஒருங்கிணைப்பாளர் அல்லது கணினி விற்பனையாளரால் நேரடியிஆக வழங்கப்படும். Red Hat Enterprise Linux 7.1 இல் Syncro CS ஐ தயாரமைப்பு செய்துள்ள பயனர்கள் Red Hat மற்றும் LSI க்கு தங்கள் கருத்துகளைப் பகிரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். LSI Syncro CS தீர்வுகள் பற்றிய மேலும் தகவலுக்கு, http://www.lsi.com/products/shared-das/pages/default.aspx ஐப் பார்க்கவும்.

LVM பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்

Red Hat Enterprise Linux 7.1 இல் புதிய LVM பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API) ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக இடம்பெற்றுள்ளது. இந்த API ஆனது LVM இன் சில குறிப்பிட்ட அம்சங்களை வினவவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
கூடுதல் தகவலுக்கு lvm2app.h மேற்குறிப்புக் கோப்பைப் பார்க்கவும்.

DIF/DIX ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல், SCSI தரநிலையில் தொழில்நுட்ப முன்னோட்டமாக DIF/DIX புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. DIF/DIX ஆனது பொதுவாகப் பயன்படுத்தப்படும் 512-பைட் வட்டு பிளாக்கின் அளவை 512 இலிருந்து 520 பைட்டாக அதிகரிக்கிறது, இது தரவு முழுமைத்தன்மைப் புலத்தை (DIF) சேர்க்கிறது. DIF ஆனது, எழுதுதல் செயல் நிகழும் போது, தரவு பிளாக்குக்காக வழங்கி பஸ் அடாப்ட்டரால் (HBA) கணக்கிடப்படும் ஒரு செக்ஸம் மதிப்பை சேமிக்கிறது. பிறகு சேமிப்பக சாதனம் பெறும் போது செக்ஸமை உறுதிப்படுத்தி, தரவு மற்றும் செக்ஸம் இரன்டையும் சேமிக்கிறது. மாறாக, வாசிப்பு நிகழும் போது, செக்ஸமானது சேமிப்பக சாதனத்தாலும் பெறும் HBA ஆலும் சோதிக்கப்படலாம்.
மேலும் தகவலுக்கு, சேமிப்பக நிர்வாக வழிகாட்டியில் உள்ள DIF/DIX செயல்படுத்தப்பட்ட பிளாக் சாதனங்கள் எனும் பிரிவைப் பார்க்கவும்.

மேம்படுத்தப்பட்ட சாதன மேப்பர் பலபாதை தொடரியல் பிழை சரிபார்ப்பு மற்றும் வெளியீடு

multipath.conf கோப்பை மேலும் நம்பகமான விதத்தில் சரிபார்க்கும் வகையில் device-mapper-multipath கருவியானது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, multipath.conf கோப்பில் பாகுபடுத்த முடியாத வரிகள் ஏதேனும் இருந்தால், device-mapper-multipath ஒரு பிழையைப் புகாரளிக்கும் மற்றும் தவறான பாகுபடுத்தலைத் தவிர்ப்பதற்காக அந்த வரிகளைப் புறக்கணிக்கும்.
கூடுதலாக, multipathd show paths format கட்டளைக்கு பின்வரும் வைல்டுகார்டு சுருங்குறித்தொடர்கள் சேர்க்கப்பட்டுள்ளன:
  • வழங்கி மற்றும் இலக்கு ஃபைபர் சேனல் வெர்ல்டு வைடு கனு பெயர்களுக்கு முறையே %N மற்றும் %n.
  • வழங்கி மற்றும் இலக்கு ஃபைபர் சேனல் வேர்லு வைடு துறை பெயர்களுக்கு முறையே %R மற்றும் %r.
இப்போது பலபாதகளை குறிப்பிட்ட ஃபைபர் சேனல் வழங்கிகள், இலக்குகள், அவற்றின் துறகளுடன் தொடர்புபடுத்துவது எளிதாகிவிட்டது. இதனால் பயனர்கள் தமது சேமிப்பிடத்தையும் அமைவாக்கத்தையும் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது.

பாடம் 4. கோப்பு முறைகள்

Btrfs கோப்பு முறைமைக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல் Btrfs (B-Tree) கோப்பு முறைமையானது தொழில்நுட்ப மாதிரியாக ஆதரிக்கப்படுகிறது. இந்தக் கோப்பு முறைமையானது மேம்பட்ட நிர்வாகம், நம்பகத்தன்மை மற்றும் மறுஅளவீடு அம்சங்களை வழங்குகிறது. இதில் பயனர்கள் ஸ்னாப்ஷாட் எடுக்க முடியும், கம்ப்ரஷன் செய்ய முடியும் மற்றும் சாதனங்களின் ஒருங்கிணைந்த நிர்வகிப்பும் சாத்தியம்.

இணை NFS க்கான ஆதரவு

இணை NFS (pNFS) என்பது NFS v4.1 தரநிலையின் ஒரு பகுதியாகும், அது கிளையன்கள் சேமிப்பக சாதனங்களை நேரடியாகவும் இணையாகவும் அணுக அனுமதிக்கிறது. pNFS கட்டமைப்பானது சில பொதுவான பணிச்சுமைகளுக்கு, NFS சேவையகங்களின் அளவுமாற்றத் தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்தக்கூடும்.
pNFS, மூன்று வெவ்வேறு சேமிப்பக நெறிமுறைகள் அல்லது தளவமைப்புகளை வரையறுக்கிறது: கோப்புகள், பொருள்கள் மற்றும் பிளாக்குகள். Red Hat Enterprise Linux 7.1 கிளையனானது கோப்புகள் தளவமைப்பை முழுமையாக ஆதரிக்கிறது, பிளாக்குகள் மற்றும் பொருள் தளவமைப்புகள் தொழில்நுட்ப முன்னோட்டமாக ஆதரிக்கப்படுகின்றன.
புதிய pNFS தளவமைப்பு வகைகளின் தகுதிநிலையை அடையவும், எதிர்காலத்தில் இன்னும் பல தளவமைப்பு வகைகளுக்கும் ஆதரவளிக்கவும், தனது கூட்டாளர்களுடனும் திறமூல திட்டப்பணிகளுடனும் சேர்ந்து Red Hat தொடர்ந்து பணிபுரிந்து வருகிறது.
pNFS பற்றிய மேலும் தகவலுக்கு, http://www.pnfs.com/ ஐப் பார்க்கவும்.

பாடம் 5. கெர்னல்

Ceph தொகுப்பு சாதனங்களுக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 கெர்னலில் libceph.ko மற்றும் rbd.ko தொகுதிக்கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த RBD கெர்னல் தொகுதிக்கூறுகளின் உதவியால், ஒரு Linux ஹோஸ்ட் கணினி ஒரு Ceph தொகுப்பு சாதனத்தை, ஒரு கோப்பகத்தில் மவுன்ட் செய்து, XFS அல்லது ext4 போன்ற வழக்கமான கோப்புமுறைமையைக் கொண்டு வடிவமைக்கக்கூடிய, வழக்கமான ஒரு வட்டாகப் பார்க்க முடியும்.
CephFS தொகுதிக்கூறு, ceph.ko ஆனது, தற்போது Red Hat Enterprise Linux 7.1 இல் ஆதரிக்கப்படாது.

ஒரேசமயத்திலான ஃபிளாஷ் MCL புதுப்பிப்புகள்

IBM System z கட்டமைப்பில் Red Hat Enterprise Linux 7.1 இல் மைக்ரோகோட் நிலை தரமுயர்த்தல்கள் (MCL) செயல்படுத்தப்பட்டுள்ளன. ஃபிளாஷ் சேமிப்பக ஊடகத்திற்கான I/O செயல்பாடுகளைப் பாதிக்காமல், இந்தத் தரமுயர்த்தல்களைப் பயன்படுத்தி, ஃபிளாஷ் வன்பொருள் சேவை நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைப் பற்றி பயனர்களுக்கு அறிவிக்க முடியும்.

செயல்நிலை கெர்னல் பேட்ச்சிங்

Red Hat Enterprise Linux 7.1 இல் kpatch ஒரு தொழில்நுட்ப மாதிரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது, இது செயல்மிகு "கெர்னல் பேட்ச்சிங் கருவி நிரலாகும்". kpatch கருவி நிரலைக் கொண்டு, மறுதுவக்கம் செய்யாமலே கெர்னலை இயக்க நிலையில் பேட்ச் செய்யப் பயன்படும், பைனரி கெர்னல் பேட்ச்கள் பலவற்றின் தொகுப்பை பயனர்கள் சிறப்பாக நிர்வகிக்க முடியும். kpatch பயன்பாடானது AMD64 மற்றும் Intel 64 கட்டமைப்புகளில் இயங்க மட்டுமே ஆதரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

1 க்கும் அதிகமான CPU கொண்ட கிராஷ்கெர்னல்

Red Hat Enterprise Linux 7.1 ஒன்றுக்கு மேற்பட்ட CPU க்களைக் கொண்டு கிராஷ்கெர்னலை பூட் செய்யும் வசதியை அளிக்கிறது. இந்த செயலம்சமானது ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக ஆதரிக்கப்படுகிறது.

dm-era இலக்கு

Red Hat Enterprise Linux 7.1 இல் dm-era சாதன-மேப்பர் இலக்கு ஒரு தொழில்நுட்ப முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. dm-era ஆனது "எரா" எனப்படும் பயனர் வரையறுக்கும் ஒரு கால அளவில் எந்தெந்த பிளாக்குகள் எழுதப்பட்டன என்பதைக் கண்காணித்து வைக்கிறது. ஒவ்வொரு எரா இலக்கு நேர்வும், தற்போதைய எராவை ஒரேவிதமாக அதிகரிக்கும் 32-பிட் கவுன்ட்டராக பராமரிக்கிறது. இந்த இலக்கானது, கடைசி மறுபிரதி நேரத்திலிருந்து எந்தெந்த பிளாக்குகள் மாற்றப்பட்டன என்பதைக் கண்காணித்துக்கொள்ள மறுபிரதி மென்பொருளை அனுமதிக்கிறது. வென்டார் ஸ்னேப்ஷாட்டுக்கு மீட்டமைஅத்த பிறகு, தேக்கக ஓரியல்புத்தன்மையை மீட்டமைப்பதற்கு, தேக்ககத்தின் உள்ளடக்கத்தின் பகுதியளவு செல்லுபடிநீக்கச் செயலையும் அனுமதிக்கிறது. dm-era இலக்கானது dm-cache இலக்குடன் பிணைக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cisco VIC கெர்னல் இயக்கி

Red Hat Enterprise Linux 7.1 இல் Cisco VIC இன்ஃபினிபேன்ட் கெர்னல் இயக்கியானது தொழில்நுட்ப மாதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இயக்கியானது உரிமைநிலை Cisco கட்டமைப்புகளில், தொலைநிலை கோப்பக நினைவக அணுகல் (RDMA)-போன்ற சொற்பொருளியலைப் பயன்படுத்த உதவுகிறது.

hwrng இல் மேம்படுத்தப்பட்ட என்ட்ராப்பி நிர்வாகம்

Red Hat Enterprise Linux 7.1 இல் virtio-rng வழியாக Linux விருந்தினர்களுக்கான இணை மெய்நிகராக்கம் செய்த RNG (hwrng) ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னர், rngd டீமானை விருந்தினருக்குள் தொடங்கி பிறகு விருந்தினர் கெர்னலின் என்ட்ராப்பித் தொகுப்பகத்திற்கு அனுப்ப வேண்டி இருந்தது. Red Hat Enterprise Linux 7.1 இல் தொடங்கி, இந்த கைமுறை செயல்நிலை தேவைப்படாது. ஒரு புதிய khwrngd தொடரிழையானது, விருந்தினர் என்ட்ராப்பி ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறையும் போது, virtio-rng சாதனத்திலிருந்து என்ட்ராப்பியைப் பெற்றுக்கொள்கிறது. இந்தச் செயல் வெளிப்படையாக நிகழ்வதானது, எல்லா Red Hat Enterprise Linux விருந்தினர்களும், KVM வழங்கிகள் வழங்கும் இணை மெய்நிகராக்கம் செய்த வன்பொருள் RNG ஐக் கொண்டிருப்பதனால் கிடைக்கும் கூடுதல் பாதுகாப்பு நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.

ஷெட்யூலர் சுமை சமநிலைப்படுத்தல் செயல்திறன் மேம்பாடு

முன்னர், ஷெட்யூலர் சுமை சமநிலைப்படுத்தல் குறியீடானது செயலிலா CPUகள் அனைத்துக்கும் சமநிலைப்படுத்தின. Red Hat Enterprise Linux 7.1 இல், ஒரு செயலிலா CPU சுமை சமநிலைப்படுத்துவதற்கான கெடு காலத்தினை அடைந்தால் மட்டுமே அந்த செயலிலா CPU இன் சார்பாக செயலிலா சுமை சமநிலைப்படுத்தலானது செய்யப்படுகிறது. இந்தப் புதிய செயல்குணமானது செயலிலாதவையற்ற CPUகளில் சுமை சமநிலைப்படுத்தலின் வேகத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் தேவையின்றி ஷெட்யூலர் செய்யும் வேலையும் குறைகிறது, இதனால் ஷெட்யூலரின் செயல்திறனும் மேம்படுகிறது.

ஷெட்யூலரில் newidle சமநிலை

இப்போது இயக்கக்கூடிய பணிகள் இருந்தால், newidle சமநிலைப்படுத்தல் குறியீட்டில் பணிகளைத் தேடுவதை நிறுத்தும் வகையில் ஷெட்யூலரின் செயல்குணமானது மாற்றப்பட்டுள்ளது. இதனால் செயல்திறன் மேம்பட்டுள்ளது.

HugeTLB கனு ஒன்றுக்கான 1GB பெரிய பக்க ஒதுக்கீட்டை ஆதரிக்கிறது

இயக்க நேரத்தில் பெரிய ஒதுக்கீட்டுக்கான ஆதரவு Red Hat Enterprise Linux 7.1 இல் சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் 1GB hugetlbfs பயன்படுத்தும் பயனர் சீரற்ற நினைவக அணுகல் (NUMA) கனுவில் 1GB ஐ ஒதுக்கிட வேண்டும் என்பதைக் குறிப்பிட முடியும்.

புதிய MCS-அடிப்படையிலான பூட்டு செயலம்சம்

Red Hat Enterprise Linux 7.1 இல் MCS பூட்டு எனும் புதிய பூட்டு செயலம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய பூட்டு செயலம்சமானது, பெரிய கணினிகளில் spinlock பரமாரிப்புத் தேவையை பெரிதும் குறைக்கிறது, இதனால் Red Hat Enterprise Linux 7.1 இல் spinlocks மிகச் செயல்திறன் மிக்கதாக உள்ளது.

செயலாக்க அடுக்கு அளவு 8KB இலிருந்து 16KB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

Red Hat Enterprise Linux 7.1 இலிருந்து, கெர்னல் செயலாக்க அடுக்கு அளவானது 8KB இலிருந்து 16KB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, இது ஸ்டாக் இடத்தைப் பயன்படுத்தும் பெரிய செயலாக்கங்களுக்கு உதவுகிறது.

perf மற்றும் systemtap இல் uprobe மற்றும் uretprobe அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

Red Hat Enterprise Linux 7.1 இல், uprobe மற்றும்uretprobe அம்சங்கள் perf கட்டளையுடனும் systemtap ஸ்கிரிப்ட்டுடனும் சரியாக வேலை செய்கிறது.

என்ட்-டு-என்ட் தரவு இசைவு சோதனை

IBM System z இல் என்ட்-டு-என்ட் தரவு இசைவு சோதனை செயல் இப்போது Red Hat Enterprise Linux 7.1 இல் முழுவதும் ஆதரிக்கப்படுகிறது. இதனால் தரவு முழுமைத்தன்மை மேம்படுகிறது, தரவு சிதைவும் இழப்பும் வெகுவாகக் குறைகிறது.

32-பிட் கணினிகளில் DRBG

Red Hat Enterprise Linux 7.1 இல், டிட்டர்மினிஸ்ட்டிக் ரேன்டம் ஜெனரேட்டர் (DRBG) 32-பிட் கணினிகளிலும் செயல்படும் விதத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பெரிய கிராஷ்கெர்னல் அளவுகளுக்கான ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல், மிகப் பெரிய (4TB க்கும் அதிக) நினைவகம் கொண்ட கணினிகளில் Kdump கெர்னல் க்ராஷ் டம்பிங் செயலம்சமானது முழுவதும் ஆதரிக்கப்படுகிறது.

பாடம் 6. மெய்நிகராக்கம்

KVM இல் அதிகபட்ச vCPUகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது

ஒரு KVM விருந்தினரில் ஆதரிக்கப்படும் CPUகளின் (vCPUகள்) அதிகபட்ச எண்ணிக்கை 240 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பயனர் விருந்தினருக்கு அமைக்கக்கூடிய மெய்நிகர் செயல் அலகுகளின் அளவு அதிகரிக்கிறது, இதனால் செயல்திறனும் மேம்படுகிறது.

QEMU, KVM மற்றும் libvirt API இல் 5ஆம் தலைமுறை Intel கோர் புதிய வழிமுறைகள் ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல், QEMU ஹைப்பர்வைசர், KVM கெர்னல் குறியீடு மற்றும் libvirt API ஆகியவற்றுக்கு 5ஆம் தலைமுறை Intel கோர் செயலிகளுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் KVM விருந்தினர்கள் பின்வரும் வழிமுறைகளையும் அம்சங்களையும் பின்பற்ற முடிகிறது: ADCX, ADOX, RDSFEED, PREFETCHW மற்றும்சூப்பர்வைசர் பயன்முறை அணுகல் தடுப்பு (SMAP).

KVM விருந்தினர்களுக்கு USB 3.0 ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல் USB 3.0 ஹோஸ்ட் அடாப்ட்டர் (xHCI) எமுலேஷனை தொழில்நுட்ப முன்னோட்டமாக சேர்த்திருப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட USB ஆதரவு இடம்பெற்றுள்ளது.

dump-guest-memory கட்டளைக்கான கம்ப்ரஷன்

Red Hat Enterprise Linux 7.1 இல், dump-guest-memory கட்டளையானது கிராஷ் டம்ப் கம்ப்ரஷனை ஆதரிக்கிறது. இதனால் virsh dump கட்டளையைப் பயன்படுத்த முடியாத பயனர்கள், விருந்தினர் க்ராஷ் டம்ப்புகளுக்கு குறைந்த நிலைவட்டு இடத்தை அவசியப்படுத்தும்படி செய்வது சாத்தியமாகிறது. அத்துடன், கம்ப்ரஸ் செய்த விருந்தினர் க்ராஷ் டம்ப்பினை அடிக்கடி சேமிக்க, கம்ப்ரஸ் செய்யாத டம்ப்பைச் சேமிப்பதற்கான நேரத்தை விட குறைவான நேரமே தேவைப்படுகிறது.

ஓப்பன் மெய்நிகர் கணினி சாதனநிரல்

Red Hat Enterprise Linux 7.1 இல் ஓப்பன் மெய்நிகர் கணினி சாதன நிரல் (OVMF) தொழில்நுட்ப மாதிரியாகக் கிடைக்கும். OVMF என்பது AMD64 மற்றும் Intel 64 விருந்தினர்களுக்கான UEFI பாதுகாப்பான பூட் சூழலாகும்.

Hyper-V இல் பிணைய செயல்திறனில் மேம்பாடு

பிணைய செயல்திறனை மேம்படுத்துவதற்காக, Hyper-V பிணைய இயக்கியின் பல புதிய அம்சங்கள் ஆதரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பக்கவாட்டு மறுஅளவாக்கத்தைப் பெறுதல், பெரிய அனுப்புதல் ஆஃப்லோடு, ஸ்கேட்டர்/கேதர் I/O ஆகியவை இப்போது ஆதரிக்கப்படுகின்றன, பிணைய த்ரூபுட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

hyperv-டீமான்களில் hypervfcopyd

hyperv-daemons தொகுப்புகளில் hypervfcopyd டீமான் சேர்க்கப்பட்டுள்ளது. hypervfcopyd என்பது Hyper-V 2012 R2 வழங்கிகளில் இயங்கும் Linux விருந்தினர்களுக்கான கோப்பு நகலெடுப்பு சேவை செயலம்சத்தின் செயல்படுத்தலாகும். இது வழங்கி (VMBUS வழியாக) Linux விருந்தினருக்கு நகலெடுப்பதை சாத்தியமாக்குகிறது.

libguestfs இல் புதிய அம்சங்கள்

Red Hat Enterprise Linux 7.1 இல் மெய்நிகர் கணினி வட்டு பிம்பங்களை அணுகுவதற்கும் மாற்றியமைப்பதற்குமான கருவிகளின் தொகுப்பான libguestfs இல் பல புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய கருவிகள்
  • virt-builder — மெய்நிகர் கணினி பிம்பங்களை உருவாக்குவதற்கான புதிய கருவி. விருந்தினர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் உருவாக்கவும் அவற்றைத் தனிப்பயனாக்கவும் virt-builder ஐப் பயன்படுத்தலாம்.
  • virt-customize — மெய்நிகர் கணினி வட்டு பிம்பங்களைத் தனிப்பயனாக்குவதற்கான புதிய கருவி. தொகுப்புகளை நிறுவ, அமைவாக்கக் கோப்புகளைத் திருத்த, ஸ்கிரிப்ட்டுகளை இயக்க மற்றும் கடவுச்சொற்களை அமைக்க virt-customize ஐப் பயன்படுத்தலாம்.
  • virt-diff — இரண்டு மெய்நிகர் கணினிகளின் கோப்பு முறைமைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்பிப்பதற்கான புதிய கருவி. ஸ்னாப்ஷாட்களுக்கு இடையே என்ன கோப்புகள் மாறியுள்ளன என எளிதாகக் கண்டுபிடிக்க virt-diff ஐப் பயன்படுத்தலாம்.
  • virt-log — விருந்தினர்களிடமிருந்து பதிவுக் கோப்புகளைப் பட்டியலிடுவதற்கான புதிய கருவி. virt-log கருவியானது பாரம்பரிய Linux, Linux பயன்படுத்தும் ஜர்னல் மற்றும் Windows நிகழ்வுப் பதிவு போன்ற பல வகை விருந்தினர்களை ஆதரிக்கும்.
  • virt-v2v — வெளி ஹைப்பர்வைசரிலிருக்கும் விருந்தினர்களை, KVM, libvirt நிர்வகிக்கும், OpenStack, oVirt, Red Hat Enterprise Virtualization (RHEV) மற்றும் பிற இலக்குகளில் இயங்கும்படி மாற்றுவதற்கான புதிய கருவி. தற்போது, virt-v2v கருவியால் Xen மற்றும் VMware ESX இல் இயங்கும் Red Hat Enterprise Linux மற்றும் Windows விருந்தினர்களை மாற்ற முடியும்.

virtio-blk-data-plane ஐப் பயன்படுத்தி ப்ளாக் I/O செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது

virtio-blk-data-plane I/O மெய்நிகராக்கம் செயலம்சமானது Red Hat Enterprise Linux 7.1 இல் முழுமையாக ஆதரிக்கப்படுகிறது. இந்த செயலம்சமானது I/O செயல்திறானுக்கு உகந்ததாக்கப்பட்ட ஒரு பிரத்யேக தொடரிழையில் I/O செயல்களைச் செய்யும் படி QEMU ஐ அமைக்கிறது.

ஃப்ளைட் ரெக்கார்டர் தடமறிதல்

Red Hat Enterprise Linux 7.1 இல் SystemTap-அடிப்படையிலான தடமறிதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. SystemTap-அடிப்படையிலான தடமறிதலின் மூலம் விருந்தினர் கணினி இயக்கத்தில் இருக்கும் வரையில், பயனர்கள் qemu-kvm தரவை தானாக பதிவு செய்ய முடிகிறது. இது qemu-kvm சிக்கல்களைப் பற்றி ஆராய்வதற்கு மற்றுமொரு உகந்த இடத்தை வழங்குகிறது, அத்துடன் இது qemu-kvm கோர் டம்ப்களை விட நெகிழ்வுத்தன்மை கொண்டதுமாகும்.
ஃப்ளைட் ரெக்கார்டர் தடமறிதலை எப்படி அமைவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பது பற்றிய விரிவான வழிமுறைகளுக்கு, மெய்நிகராக்க தயாரமைப்பு மற்றும் நிர்வாக வழிகாட்டியைப் பார்க்கவும்.

NUMA கனு நினைவக ஒதுக்கீட்டுக் கட்டுப்பாடு

libvirt இன் டொமைன் XML அமைவாக்கத்தில் <numatune> அமைவுக்கு <memnode> சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள், விருந்தினர் இயக்க முறைமையின் சீரற்ற நினைவக அணுகல் (NUMA) கனு ஒவ்வொன்றுக்குமான நினைவகக் கட்டுப்பாடுகளைக் கட்டுப்படுத்த பயனர்கள் முடிகிறது, இதன் காரணமாக, qemu-kvm க்கான செயல்திறன் மேம்படுகிறது.

பாடம் 7. க்ளஸ்டரிங்

கோரோசிங்கிற்கான டைனமிக் டோக்கன் டைமவுட்

Corosync Cluster Engine இல் token_coefficient விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்படும் பிரிவி nodelist பிரிவு குறிப்பிடப்பட்டு, அதே சமயம் அது குறைந்தது மூன்று கனுக்களைக் கொண்டிருந்தால் மட்டுமே token_coefficient இன் மதிப்பு பயன்படுத்தப்படும். இத்தகைய சூழ்நிலையில், டோக்கன் டைமவுட் பின்வரும் வகையில் கணக்கிடப்படுகிறது:
[டோக்கன் + (கனுக்களின் அளவு - 2)] * token_coefficient
இதனால், புதிய கனு சேர்க்கப்படும் ஒவ்வொரு முறையும், டோக்கன் டைமவுட்டை கைமுறையாக மாற்றாமலே க்ளஸ்ட்டரால் மறுஅளவீடு செய்ய முடிகிறது. முன்னிருப்பு மதிப்பு 650 மில்லிவினாடிகளாகும். ஆனால் அதை 0 என்றும் அமைக்கலாம், அப்படி அமைத்தால், இந்த அம்சம் அகற்றப்பட்டதன் விளைவு கிடைக்கும்.
இந்த அம்சத்தின் உதவியால், Corosync ஆல் செயல்நிலையில் கனுக்களைச் சேர்க்கவும் அகற்றவும் முடியும்.

Corosync டை ப்ரேக்கர் மேம்படுத்தல்

Corosync இன் auto_tie_breaker க்வோரம் அம்சமானது டை ப்ரேக்கர் கனுக்களின் கூடுதல் நெகிழ்தன்மை கொண்ட அமைவாக்கத்திற்கும் திருத்தத்திற்கும் உதவும் விருப்பங்களை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது க்ளஸ்ட்டர் சம எண்ணிக்கையில் பிரிக்கப்படும் போது பயனர் க்வோரத்தைக் கொண்டிருக்கும் கனுக்களின் ஒரு பட்டியலைத் தேர்ந்தெடுக்க முடியும் அல்லது மிகக் குறைந்த கனு ID அல்லது மிக அதிக கனு ID கொண்ட கனு க்வோரத்தைக் கொண்டிருக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

Red Hat High Availability மேம்படுத்தல்கள்

Red Hat Enterprise Linux 7.1 வெளியீட்டில், Red Hat High Availability துணை நிரலானது பின்வரும் அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த அம்சங்கள் பற்றிய தகவலுக்கு High Availability துணை நிரல் குறிப்புதவி கையேட்டைப் பார்க்கவும்.
  • இப்போது pcs resource cleanup கட்டளையானது, எல்லா வளங்களுக்குமான வள நிலை மற்றும் ஃபெயில்கவுன்ட்டை மீட்டமைக்க முடியும்.
  • pcs resource move கட்டளை உருவாக்கும் வளக் கட்டுப்பாடு எவ்வளவு காலம் விளைவில் இருக்கும் என்ற கால அளவைக் குறிப்பதற்காக, இக்கட்டளைக்கு ஒரு lifetime அளவுருவைக் குறிப்பிட முடியும்.
  • அணுகல் கட்டுப்பாட்டுப் பட்டியல்களைப் (ACLகள்) பயன்படுத்தி கணினி பயனர்களுக்கு, க்ளஸ்ட்டர் அமைவாக்கத்திற்கான வாசிக்க மட்டும் அல்லது வாசிக்க எழுதுவதற்கான அணுகல் அனுமதிகளை அமைக்க pcs acl கட்டளையைப் பயன்படுத்தலாம்.
  • இப்போது pcs constraint கட்டளையானது, பொதுவான வள விருப்பங்களுடன் கூடுதலாக, குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விருப்பங்களின் அமைவாக்கத்தையும் ஆதரிக்கிறது.
  • pcs resource create கட்டளை, உருவாக்கப்படும் வளமானது தானாக துவக்கப்படாது என்பதைக் குறிப்பதற்குப் பயன்படும் disabled அளவுருவை ஆதரிக்கிறது.
  • ஒரு க்வோரத்தை உருவாக்கும் போது க்ளஸ்ட்டர் அனைத்து கனுக்களுக்காகவும் காத்திருப்பதை pcs cluster quorum unblock கட்டளை தடுக்கிறது.
  • pcs resource create கட்டளையின் before மற்றும் after அளவுருக்களைப் பயன்படுத்தி வளக் குழு வரிசையை அமைவாக்கம் செய்ய முடியும்.
  • இப்போது நீங்கள் pcs config கட்டளையின் backup மற்றும் restore விருப்பங்களைக் கொண்டு க்ளஸ்ட்டர் அமைவாக்கத்தை ஒரு டார்பாலில் மறுபிரதியெடுத்துக்கொள்ளலாம், எல்லா கனுக்களிலும் உள்ள க்ளஸ்ட்டர் அமைவாக்கக் கோப்புகளையும் மீட்டெடுக்கலாம்.

பாடம் 8. கம்பைலர் மற்றும் கருவிகள்

System z பைனரிகளில் Linux க்கான ஹாட் பேட்ச்சிங் ஆதரவு

GNU கம்பைலர் தொகுப்பானது (GCC) System z பைனரிகளில், Linux க்கான பல தொடரிழைக் குறீயீட்ட்டை ஆன்லைனில் பேட்ச் செய்யும் வசதியைச் செயல்படுத்துகிறது. ஹாட் பேட்ச்சிங் செய்வதற்காக, குறிப்பிட்ட செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்க "function attribute" ஐப் பயன்படுத்தலாம், அனைத்து செயல்பாடுகளுக்கும் ஹாட் பேட்ச்சிங் செய்ய -mhotpatch கட்டளை வரி விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
ஹாட் பேட்ச்சிங் வசதியை இயக்குவதால் மென்பொருளின் அளவு மற்றும் செயல்திறனில் எதிர்மறை பாதிப்பு ஒன்று உள்ளது. ஆகவே ஹாட் பேட்ச்சிங் ஆதரவை எல்லா செயல்பாடுகளுக்கும் இயக்காமல், குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் செயல்படுத்துவதே பரிந்துரைக்கப்படுகிறது.
System z பைனரிகளில் Linux க்கான ஹாட்பேட்ச்சிங் ஆதரவு Red Hat Enterprise Linux 7.0 இல் தொழில்நுட்ப மாதிரியாக இருந்தது. Red Hat Enterprise Linux 7.1 இன் வெளியீட்டிலிருந்து, இது முழுமையாக ஆதரிக்கப்படுகிறது.

Performance Application Programming Interface மேம்படுத்தல்

Red Hat Enterprise Linux 7 இல் Performance Application Programming Interface (PAPI) பயன்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. PAPI என்பது நவீன மைக்ரோ செயலிகளிலான வன்பொருள் செயல்திறன் கவுன்ட்டர்களுக்கான இயங்குதளங்களுக்கான இடையம்சம் கொண்ட இடைமுகத்திற்கான விவரக்குறிப்பீடாகும். இந்த கவுன்ட்டர்கள் நிகழ்வுகளை எண்ணுகின்ற சிறிய பதிவகங்களின் ஒரு சிறு தொகுதியாக விளங்குகின்றன. செயலியின் செயல்பாட்டுடன் தொடர்புடைய குறிப்பிட்ட சிக்னல்களின் நிகழ்வே இந்த நிகழ்வுகளாகும். இவற்றைக் கண்காணிப்பதில், பயன்பாடு செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் டியூனிங் செயல்களில் பல பயன்கள் உள்ளன.
Red Hat Enterprise Linux 7.1 இல், IBM Power 8, Applied Micro X-Gene, ARM Cortex A57 மற்றும் ARM Cortex A53 ஆகிய செயலிகளுக்கு ஆதரவை வழங்கும் வகையில், PAPI மற்றும் அதன் தொடர்புடைய libpfm தரவகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் Intel Haswell, Ivy Bridge மற்றும் Sandy Bridge செயலிகளுக்கு ஏற்ப நிகழ்வுத் தொகுப்புகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

OProfile

OProfile என்பது Linux கணினிகளுக்கான கணினியளவிலான ஒரு ப்ரொஃபைலராகும். இந்த ப்ரொஃபைலிங் செயலானது வெளிப்படையாக பின்புலத்தில் இயங்கும், தனியமைப்புத் தரவை எப்போது வேண்டுமானாலும் சேகரித்துக்கொள்ள முடியும். Red Hat Enterprise Linux 7.1 இல், பின்வரும் செயலிக் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் OProfile பயன்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது: Intel Atom செயலி C2XXX, 5ஆம் தலைமுறை Intel கோர் செயலிகள், IBM Power8, AppliedMicro X-Gene மற்றும் ARM Cortex A57.

OpenJDK8

Red Hat Enterprise Linux 7.1 இல் java-1.8.0-openjdk தொகுப்புகள் தொழில்நுட்ப மாதிரியாக இடம்பெற்றுள்ளன. இதில் Open Java Development Kit இன் (OpenJDK) சமீபத்திய பதிப்பான OpenJDK8 உள்ளது. இந்தத் தொகுப்புகள் Java SE 8 இன் முழு இணக்கமுள்ள செயல்படுத்தலை வழங்குகின்றன, Red Hat Enterprise Linux 7.1 இல் முன்பே உள்ள java-1.7.0-openjdk தொகுப்புகளுடன் சேர்த்தும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
Java 8 இல் Lambda சுருங்குறித்தொடர்கள், முன்னிருப்பு முறைகள், தொகுப்புகளுக்கான ஒரு புதிய ஸ்ட்ரீம் API, JDBC 4.2, வன்பொருள் AES ஆதரவு போன்ற எண்ணற்ற புதிய மேம்படுத்தல்கள் உள்ளன. அத்துடன் OpenJDK8 இல் எண்ணற்ற பிற செயல்திறன் மேம்படுத்தல்களும் வழுத்திருத்தங்களும் அடங்கியுள்ளன.

snap க்கு பதில் sosreport இடம்பெற்றுள்ளது

powerpc-utils தொகுப்பிலிருந்து, வழக்கழிந்து போன snap கருவி அகற்றப்பட்டுள்ளது. அதன் செயலம்சம் sosreport கருவியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Little-Endian 64-பிட் PowerPC க்கான GDB ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல், GNU Debugger இல் (GDB), 64-பிட் PowerPC little-endian கட்டமைப்புக்கான ஆதரவுள்ளது.

Tuna மேம்படுத்தல்

Tuna என்பது ஷெட்யூலர் கொள்கை, RT முன்னுரிமை மற்றும் CPU ஈர்ப்புத்தன்மை போன்ற சரிசெய்யத்தக்க ஷெட்யூலர் பண்புகளை சரிசெய்யப் பயன்படும் கருவியாகும். Red Hat Enterprise Linux 7.1 இல், Tuna GUI ஆனது துவக்கப்படும் போது ரூட் அங்கீகரிப்பைக் கோரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது, இதனால் பயனர் Tuna GUI ஐத் துவக்குவதற்காக டெஸ்க்டாப்பை ரூட்டாக இயக்க வேண்டியிருக்காது. Tuna பற்றிய கூடுதல் தகவலுக்கு, Tuna பயனர் வழிகாட்டியைப் பார்க்கவும்.

பாடம் 9. பிணையமாக்கல்

நம்பகமான பிணைய இணைப்பு

Red Hat Enterprise Linux 7.1 நம்பகமான பிணைய இணைப்பு செயலம்சத்தை தொழில்நுட்ப முன்னோட்டமாக அறிமுகப்படுத்துகிறது. நம்பகமான பிணைய இணைப்பு செயலம்சமானது TLS, 802.1X அல்லது IPSec போன்ற தற்போதுள்ள பிணைய அணுகல் கட்டுப்பாட்டு (NAC) வசதிகளுடன் சேர்த்து, இறுதிப்புள்ளி நிலையமைவு மதிப்பீட்டை ஒருங்கிணைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது; அதாவது இறுதிப் புள்ளியின் கணினி தகவல்களைச் சேகரித்தல் (இயக்க முறைமை அமைவாக்க அமைவுகள், நிறுவப்பட்டுள்ள தொகுப்புகள் மற்றும் பிற ஒருங்கிணைப்பு அளவீடுகள் எனப்படும் பிற தகவல்கள் போன்றவை). நம்பகமான பிணைய இணைப்பு செயலம்சமானது, பிணையத்தை அணுக ஒரு இறுதிப்புள்ளியை அனுமதிக்கும் முன்பு, இந்த அளவீடுகளை பிணைய அணுகல் கொள்கைகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க பயன்படுகிறது.

qlcnic இயக்கியில் SR-IOV செயலம்சம்

qlcnic இயக்கியில் சிங்கிள்-ரூட் I/O மெய்நிகராக்கம் (SR-IOV) தொழில்நுட்ப முன்னோட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செயலம்சத்திற்கான ஆதரவை QLogic நேரடியாக வழங்கும், QLogic க்கும் Red Hat க்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். qlcnic இயக்கியில் உள்ள மற்ற செயலம்சங்கள் எப்போதும் போல முழுவதுமாக ஆதரிக்கப்படும்.

பெர்க்லே பேக்கட் வடிகட்டி

Red Hat Enterprise Linux 7.1 இல், பெர்க்லே பேக்கட் வடிகட்டி (BPF) அடிப்படையிலான டிராஃபிக் க்ளாசிஃபயர் சேர்க்கப்பட்டுள்ளது. BPF ஆனது பேக்கட் சாக்கெட்டுகளுக்கான பேக்கட் வடிகட்டலிலும், பாதுகாப்பான கணிப்பீட்டு பயன்முறையில் சேன்ட்பாக்ஸிங்கிற்கும் (seccomp) மற்றும் நெட்ஃபில்ட்டரிலும் பயன்படுகிறது. BPF இல் பெரும்பாலான முக்கியமான கட்டமைப்புகளுக்கான ஜஸ்ட் இன் டைம் செயல்படுத்தல் உள்ளது மற்றும் ஒரு வடிகட்டிகளைக் கட்டமைப்பதற்கான உயர் தொடரியலும் உள்ளது.

கடிகார நிலைத்தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது

முன்னர், டிக்கற்ற கெர்னல் திறப்பாட்டிஅ முடக்குவதால் கணினி கடிகாரத்தின் நிலைத்தன்மை கணிசமாக மேம்படுத்தப்படும் என்று சோதனை முடிவுகள் காண்பித்தன. கெர்னல் பூட் விருப்ப அளவுருக்களில் nohz=off ஐச் சேர்ப்பதன் மூலம், டிக்கற்ற கெர்னல் பயன்முறையை முடக்கலாம். இருப்பினும் Red Hat Enterprise Linux 7.1 இல் செயல்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தல்களின் காரணமாக கணினி கடிகாரத்தின் நிலைத்தன்மை பெரிதும் மேம்பட்டுள்ளது, மேலும் nohz=off உள்ள மற்றும் அற்ற கடிகாரங்களின் நிலைத்தன்மையிலான வேறுபாடானது பெரும்பாலான பயனர்களுக்கு இப்போது மிகச் சிறிதாகவே இருக்கும். இது PTP மற்றும் NTP ஐப் பயன்படுத்தும் நேர ஒத்திசைவுப் பயன்பாடுகளுக்கு பயனுள்ளதாகும்.

libnetfilter_queue தொகுப்புகள்

Red Hat Enterprise Linux 7.1 இல் libnetfilter_queue தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளடு. libnetfilter_queue என்பது கெர்னல் பேக்கட் வடிகட்டியால் வரிசையில் செலுத்தப்பட்ட பேக்கட்டுகளுக்கு ஒரு API ஐ வழங்கும் பயனர் வெளி தரவகமாகும். கெர்னல் nfnetlink_queue உப முறைமையிலிருந்து வரிசையில் செலுத்தப்படும் பேக்கட்டுகளைப் பெறுதல் மற்றும் பேக்கட்டுகளைப் பாகுபடுத்துதல் மற்றும் மாற்றம் செய்த பேக்கட்டுகளை மீண்டும் செலுத்துதல் ஆகியவற்றைச் செய்ய உதவுகிறது.

அணியாக்க மேம்படுத்தல்கள்

Red Hat Enterprise Linux 7.1 இல் libteam தொகுப்பானது 1.14-1 பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பானது பல வழுத்திருத்தங்களையும் மேம்படுத்தல்களையும் வழங்குகிறது, குறிப்பாக teamdsystemd மூலம் தானாக மறுநீட்டமைக்க முடியும், இதனால் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை அதிகமாகிறது.

Intel QuickAssist தொழில்நுட்ப இயக்கி

Red Hat Enterprise Linux 7.1 இல் Intel QuickAssist Technology (QAT) இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது. QAT இயக்கியானது, கணினிக்கு ஆஃப்லோடு கிரிப்ட்டோ திறப்பாடுகளை இயக்குகின்ற QuickAssist வன்பொருளை இயக்குகிறது.

PTP மற்றும் NTP க்கு இடையிலான ஃபெயிலோவர் LinuxPTP டைம்மாஸ்ட்டர் ஆதரவு

Red Hat Enterprise Linux 7.1 இல் linuxptp தொகுப்பானது1.4 பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது பல வழுத்திருத்தங்களையும் மேம்படுத்தல்களையும் வழங்குகிறது, குறிப்பாக timemaster பயன்பாட்டைப் பயன்படுத்தி PTP டொமைன்கள் மற்றும் NTP மூலங்களுக்கு இடையிலான ஃபெயிலோவர் ஆதரவைக் கூறலாம். பிணையத்தில் பல PTP டொமைன்கள் கிடைப்பதாக இருந்தால், அல்லது மீண்டும் NTP க்குச் செல்லும் அவசியம் ஏற்பட்டால், கிடைக்கின்ற நேர மூலங்கள் அனைத்திற்கும் ஏற்ப கணினி கடிகாரத்தை ஒத்திசைக்க timemaster பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.

பிணைய இனிட்ஸ்கிரிப்ட்டுகள்

Red Hat Enterprise Linux 7.1 இல் தனிப்பயன் VLAN பெயர்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. GRE இல் IPv6 டன்னல்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது உள் முகவரிகள் மறுதுவக்கங்களின் போதும் மாறாமல் நிலைத்திருக்கின்றன.

TCP தாமத ACK

Red Hat Enterprise Linux 7.1 இல், அமைவாக்கம் செய்யக்கூடிய TCP தாமதமாக்கிய ACK க்கான ஆதரவு iproute தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ip route quickack கட்டளை மூலம் இதனை இயக்கலாம்.

NetworkManager

இப்போது Red Hat Enterprise Linux 7.1 இல் lacp_rate பிணைப்பாக்கம் விருப்பம் ஆதரிக்கப்படுகிறது. மாஸ்ட்டர் இடைமுகங்களை ஸ்லேவ் இடைமுகங்களுக்கு மறுபெரயரிடும் போது எளிதாக மறூபெயரிட உதவும் வகையில் NetworkManager பயன்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் NetworkManager பயன்பாட்டின் தானியங்கு இணைப்பு செயலம்சத்தில், முன்னுரிமை அமைவு சேர்க்கப்பட்டுள்ளது. தானியங்கு இணைப்புக்குத் தகுதி கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட போட்டி இணைப்புகள் இருந்தால், NetworkManager பயன்பாடானது அதிக முன்னுரிமை கொண்ட இணைப்பையே தேர்ந்தெடுக்கும். கிடைக்கின்ற எல்லா இணைப்புகளு சமமான முன்னுரிமை மதிப்புகளைக் கொண்டிருந்தால், NetworkManager முன்னிருப்பு செயல்குணத்தின் படி செயல்பட்டு கடைசியாக செயலில் இருந்த இணைப்பைத் தேர்ந்தெடுக்கும்.

பிணைய பெயர்வெளிகள் மற்றும் VTI

Red Hat Enterprise Linux 7.1 இல், பிணைய பெயர்வெளிகளுடனான மெய்நிகர் டன்னல் இடைமுகங்களுக்கான (VTI) ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் VTI இலிருந்து வரும் டிராஃபிக்கை, பேக்கட்டுகள் என்கேப்சுலேட் செய்யப்படும் போது அல்லது டி என்கேப்சுலேட் செய்யப்படும் போது வெவ்வேறு பெயர்வெளிகளுக்கு செலுத்த முடிகிறது.

MemberOf செருகுநிரலுக்கான மாற்று அமைவாக்க சேமிப்பகம்

இப்போது 389 கோப்பக சேவையகத்திற்கான MemberOf செருகுநிரலின் அமைவாக்கத்தை பின்புல அமைப்பு தரவுத்தளத்துடன் மேப் செய்யப்பட்ட ஒரு பின்னொட்டில் சேமிக்க முடியும். இதனால் MemberOf செருகுநிரல் அமைவாக்கத்தை பிரதியுருவாக்கம் செய்ய முடியும், இதனால் பிரதியுருவாக்கம் செய்த சூழலில் உள்ள MemberOf செருகுநிரல் அமைவாக்கமும் இசைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது எளிதாகிறது.

பாடம் 10. Docker வடிவமைப்பில் Linux கன்டெய்னர்கள்

Docker ஒரு திறமூல திட்டப்பணியாகும். இது Linux கன்டெய்னர்களுக்குள் பயன்பாடுகளை தயாரமைப்பதை தன்னியக்கமாக்குவதுடன், ஒரு பயன்பாட்டை, அதன் இயக்க நேர சார்புத் தொகுப்புகளுடன் ஒரு கன்டெய்னரில் பேக்கேஜ் செய்யும் வசதியையும் அளிக்கிறது. இது பட அடிப்படையிலான கன்டெய்னர்களை வாழ்க்கைச் சுழற்சி நிர்வகிப்பதற்கான Docker CLI கட்டளை வரிக் கருவியை அளிக்கிறது. Linux கன்டெய்னர்களினால் பயன்பாடு தயாரமைப்பு, எளிய சோதனைகள், பராமரிப்பு மற்றும் சிக்கல் தீர்ப்பு போன்றவற்றை வேகமாகச் செய்ய முடிகிறது, அத்துடன் பாதுகாப்பும் மேம்படுகிறது. Docker உடன் Red Hat Enterprise Linux 7 ஐப் பயன்படுத்துவதால், வாடிக்கையாளர்கள் பணியாளர் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும், மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை வேகமாக தயாரமைக்க முடியும், இன்னும் துரிதமான சூழலை உருவாக்கிக்கொள்ள முடியும், வளங்களை இன்னும் நெருக்கமாக நிர்வகிக்க முடியும்.
Docker கன்டெய்னர்களை பயன்படுத்தத் துவங்குவது பற்றி அறிய, Docker கன்டெய்னர்களைப் பயன்படுத்தத் தொடங்குக என்பதைப் பார்க்கவும்.
Red Hat Enterprise Linux 7.1 இல் Docker 1.3.2 கிடைக்கிறது, இதில் பல புதிய அம்சங்கள் உள்ளன.
  • Docker இல் டிஜிட்டல் கையொப்ப சரிபார்ப்பு அம்சம் உள்ளது. இது தொழில்நுட்ப முன்னோட்டமாக அளிக்கப்படுகிறது. இப்போது Docker எஞ்சினானது அனைத்து அதிகாரப்பூர்வ தொகுப்பதிவகங்களின் தோற்றமுதல் மற்றும் முழுமைத்தன்மையை டிஜிட்டல் கையொப்பங்களைப் பயன்படுத்தி தானாக சரிபார்க்கும்.
  • docker exec கட்டளையின் மூலம், Docker API-ஐப் பயன்படுத்தி செயலாக்கங்களை Docker கன்டெய்னருக்குள் இடம்பெறச் செய்ய முடியும்.
  • docker create கட்டளையின் மூலம் ஒரு கன்டெய்னரை உருவாக்கலாம். ஆனால் இந்தக் கட்டளை செயலாக்கம் எதனையும் கன்டெய்னரில் இடம்பெறச் செய்யாது. இது கன்டெய்னர்களின் வாழ்க்கைச் சுழற்சிகளை நிர்வகிப்பதை மேம்படுத்துகிறது.
Red Hat Enterprise Linux 6 மற்றும் Red Hat Enterprise Linux 7 இரண்டிலும், பயன்பாடுகளைக் கட்டமைப்பதற்காக Docker அடிப்படை படிமங்களை Red Hat வழங்குகிறது.
கன்டெய்னர்களை ஒழுங்கமைப்பதற்குப் பயன்படும் Kubernetes பயன்பாட்டையும் Red Hat வழங்குகிறது. Kubernetes பற்றிய மேலும் தகவலுக்கு Kubernetes ஐப் பயன்படுத்தி Docker கன்டெய்னர்களை ஒழுங்கமைக்கத் தொடங்குதல் என்பதைக் காண்க.
SELinux இயக்கப்பட்ட ஹோஸ்ட்களில், Docker வடிவமைப்புடனான Linux கன்டெய்னர்கள் இயங்கும். /var/lib/docker/ கோப்பகமானது B-tree கோப்பு முறைமையைப் (Btrfs) பயன்படுத்தும் பகிர்வில் இருந்தால் SELinux ஆதரிக்கப்படாது.

10.1. Docker கன்டெய்னர்களின் கூறுகள்

Docker பின்வரும் அடிப்படைக் கூறுகளுடன் செயல்படுகிறது:
  • கன்டெய்னர் என்பது ஒரு பயன்பாடு சேன்ட்பாக்ஸாகும். ஒவ்வொரு கன்டெய்னரும் தேவையான அமைவாக்கத் தகவலைக் கொண்டுள்ள ஒரு படிமத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒரு படிமத்திலிருந்து நீங்கள் ஒரு கன்டெய்னரைத் துவக்கும் போது, இந்தப் படிமத்தின் மேல் ஒரு எழுதக்கூடிய அடுக்கு சேர்க்கப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு முறை (docker commit கட்டளையைப் பயன்படுத்தி) ஒரு கன்டெய்னரைச் சேர்க்கும், ஒரு புதிய படிம அடுக்கு சேர்க்கப்பட்டு உங்கள் மாற்றங்கள் சேமிக்கப்படும்.
  • படிமம் என்பது கன்டெய்னர்களின் அமைவாக்கத்தின் ஒரு நிலையான நொடிப்புக் காட்சியாகும். படிமம் என்பது வாசிக்க மட்டுமான ஒரு அடுக்காகும். அது ஒருபோதும் மாற்றம் செய்யப்படாது, மாற்றங்கள் அனைத்துமே எழுதக்கூடிய மேல் அடுக்கில் மட்டுமே செய்யப்படும், அவை புதிய படிமத்தை உருவாக்கியே சேமிக்கவும் முடியும். ஒவ்வொரு படிமமும் ஒன்று அல்லது அதிக தாய் படிமங்களைப் பொறுத்தது.
  • இயங்குதள படிமம் என்பது தாய் படிமம் இல்லாத படிமமாகும். இயங்குதள படிமங்களே கன்டெய்னரிலான பயன்பாடுகள் இயங்கத் தேவையான,இயக்க நேர சூழல், தொகுப்புகள் மற்றும் தேவையான பயன்பாட்டு நிரல்களை வரையறுக்கின்றன. இயங்குதள படிமம் வாசிக்க மட்டுமானது, ஆகவே மாற்றங்கள் அனைத்தும் இதற்கு மேல் அமையும் புதிய படிமங்களின் அடுக்கிலே இருக்கும். இத்தகைய அடுக்கின் ஒரு எடுத்துக்காட்டை படம் 10.1, “Docker வடிவமைப்பைப் பயன்படுத்தி படிம அடுக்கமைத்தல்” இல் காணலாம்.
  • பதிவகம் என்பது படிமங்களின் தொகுப்பதிவகமாகும். பதிவகம் என்பது பொது அல்லது தனிப்பட்ட தொகுப்பதிவகமாகும், இவற்றிலிருந்து படிமங்களைப் பதிவிறக்கிக்கொள்ள முடியும். சில பதிவகங்கள் பிறருக்காக படிமங்களைப் பதிவேற்றவும் அனுமதிக்கின்றன.
  • Dockerfile என்பது அமைவாக்கக் கோப்பாகும். இதில் Docker படிமங்களுக்கான பில்டு வழிமுறைகளும் உள்ளன. பில்டு செயல்முறைகளைத் தன்னியக்கமாக்க, பகிர மற்றும் மீண்டும் பயன்படுத்த இந்த Dockerfiles உதவுகிறது.
Docker வடிவமைப்பைப் பயன்படுத்தி படிம அடுக்கமைத்தல்
A scheme depicting image layers used in Docker.

படம் 10.1. Docker வடிவமைப்பைப் பயன்படுத்தி படிம அடுக்கமைத்தல்


10.2. Docker பயன்படுத்துவதன் நன்மைகள்

Docker பயன்பாடு கன்டெய்னர் நிர்வாகத்திற்கான ஒரு API, ஒரு படிம வடிவமைப்பு மற்றும் கன்டெய்னர்களைப் பகிர்வதற்காக ஒரு தொலைநிலை பதிவகத்தைப் பயன்படுத்தும் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டமானது டெவலப்பர்கள் மற்றும் கணினி நிர்வாகிகள் இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும், அவற்றில் சில நன்மைகள் பின்வருமாறு:
  • துரித பயன்பாடு தயாரமைப்பு – கன்டெய்னர்களில் பயன்பாட்டின் குறைந்தபட்ச இயக்க நேரத் தேவைகள் உள்ளடங்கியுள்ளன, இதனால் அவற்றின் அளவு குறைவாக இருப்பதால் அவற்றை விரைவாக தயாரமைப்பு செய்ய முடியும்.
  • பல கனினிகளுக்கிடையே பயன்படுத்தும் வசதி பயன்பாட்டையும் அதன் சார்புத் தொகுதிகள் அனைத்தையும், Linux கெர்னலின் ஹோஸ்ட் பதிப்பு, இயங்குதள விநியோகம் அல்லது தயாரமைப்பு மாடல் ஆகியவற்றைச் சாராத ஒரு ஒற்றை கன்டெய்னர் தொகுப்பாகக் கட்டமைக்க முடியும். இந்த கன்டெய்னரை, Docker இயங்கும் மற்றொரு கணினிக்கு எவ்வித இணக்கப் பிரச்சனைகளும் இன்றி எளிதாக மாற்றிவிட முடியும்.
  • பதிப்புக் கட்டுப்பாடு மற்றும் கூறு மறுபயன்பாடு – ஒரு கன்டெய்னரின் அடுத்தடுத்த பதிப்புகளைத் தடமறியலாம், வேறுபாடுகளை ஆய்வு செய்ய முடியும் அல்லது முந்தைய பதிப்புகளுக்கு மீட்டமைக்க முடியும். கன்டெய்னர்கள் முந்தைய அடுக்குகளில் இருக்கும் கூறுகளை மீண்டும் பயன்படுத்துகின்றன, இதனால் அவற்றின் அளவு சிறிதாக உள்ளது.
  • பகிர்தல் – நீங்கள் உங்கள் கன்டெய்னரைப் பிறருடன் பகிர்வதற்காக ஒரு தொலைநிலை தொகுப்பதிவகத்தைப் பயன்படுத்தலாம். இந்தத் தேவைக்காக Red Hat ஒரு தொகுப்பதிவகத்தை வழங்குகிறது. உங்களுக்கென தனிப்பட்ட தொகுப்பதிவகத்தையும் அமைவாக்கம் செய்து கொள்ள முடியும்..
  • சிறிய அளவு கொண்ட தடங்கள் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்புத் தேவை – Docker படிமங்கள் வழக்கமாக மிகச் சிறியவை, இதனால் வழங்கல் வேகம் அதிகம், புதிய பயன்பாடு கன்டெய்னர்களை தயாரமைப்பு செய்வதற்கான நேரம் குறைகிறது.
  • எளிய பராமரிப்பு – பயன்பாட்டின் சார்புத்தொகுதிகள் தொடர்பான சிக்கல்களுக்கான வாய்ப்புகளையும் அதற்குத் தேவைப்படும் உழைப்பையும் Docker குறைக்கிறது.

10.3. மெய்நிகர் கணினிகளுடன் ஒப்பீடு

மெய்நிகர் கணினிகள் என்பவை தொடர்புடைய மென்பொருள் மற்றும் பராமரிப்பு தேவைகள் அனைத்தையும் கொண்ட முழுமையான சேவையகமாகும். Docker கன்டெய்னர்கள் பயன்பாடுகளுக்கான தனியிடத்தை வழங்குகின்றன, அவற்றை மிகக் குறைந்தபட்ச இயக்க நேர சூழல்களிலேயே அமைவாக்கம் செய்துவிட முடியும். Docker கன்டெய்னர் ஒன்றில், இயக்க முறைமை உட்கட்டமைப்பின் கெர்னல் பகுதிகள் பகிரப்படுகின்றன. மெய்நிகர் கணினிகளில், இயக்க முறைமை முழுவதுமே தனியாக தேவைப்படும்.
  • கன்டெய்னர்களை விரைவாகவும் எளிதாகவும் உருவாக்கலாம், அழிக்கலாம். மெய்நிகர் கணினிகளை உருவாக்க முழு நிறுவல் செயலையும் செய்து முடிக்க வேண்டும், அதைச் செய்ய கணினி வளம் அதிகம் தேவைப்படும்.
  • கன்டெய்னர்கள் சிறிய அளவு கொண்டவை,ஆகவே ஹோஸ்ட் கணினி ஒன்றில் ஒரே சமயத்தில் இயக்கக்கூடிய மெய்நிகர் கணினிகளைக் காட்டிலும் கன்டெய்னர்களின் எண்ணிக்கை அதிகம்.
  • கன்டெய்னர்கள் வளங்களை சிறப்பாக பகிர்ந்து பயன்படுத்துகின்றன. மெய்நிகர் கணினிகள் தனிப்படுத்தப்பட்டவை. இதனால் கன்டெய்னர்களில் இயங்கும் பயன்பாட்டின் பல வகைகளும் சிறிய அளவு கொண்டவையாக இருக்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, பகிரப்பட்ட பைனரிகள் கணினியில் பிரதியெடுக்கப்படுவதில்லை.
  • மெய்நிகர் கணினிகளை, செயலில் இருக்கும் நிலையிலேயே இடப்பெயர்ப்பு செய்ய முடியும். ஆனால் கன்டெய்னர்களை செயலில் இருக்கும் நிலையில் இடப்பெயர்ப்பு செய்ய முடியாது, அவற்றை ஒரு ஹோஸ்ட் கணினியிலிருந்து வேறொன்றுக்கு நகர்த்தும் போது நிறுத்தியாக வேண்டும்.
எல்லாத் தேவைகளுக்கும், கன்டெய்னர்களை மெய்நிகர் கணினிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்த முடியாது. உங்கள் தேவைக்கு எது பொருத்தமானது என்று முடிவு செய்ய கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
Docker கன்டெய்னர்களை பயன்படுத்தத் துவங்குவது பற்றி அறிய, Docker கன்டெய்னர்களைப் பயன்படுத்தத் தொடங்குக என்பதைப் பார்க்கவும்.
Docker அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவில், Linux கன்டெய்னர்கள், Docker, சந்தாக்கள் மற்றும் ஆதரவு தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கும்.

10.4. Red Hat Enterprise Linux 7.1 இல் Docker ஐப் பயன்படுத்துதல்

Docker, Kubernetes மற்றும் Docker Registry ஆகியவை Red Hat Enterprise Linux இல் எக்ஸ்ட்ராஸ் சேனலின் பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. எக்ஸ்ட்ராஸ் சேனல் இயக்கப்பட்டதும், இந்தத் தொகுப்புகளை வழக்கம் போல நிறுவிக்கொள்ளலாம். தொகுப்புகளை நிறுவுதல் மற்றும் சேனல்களை இயக்குதல் பற்றிய கூடுதல் தகவலுக்கு கணினி நிர்வாகி வழிகாட்டியைப் பார்க்கவும்.
சான்றளிக்கப்பட்ட docker படிமங்களின் பதிவகம் ஒன்றை Red Hat வழங்குகிறது. இந்தப் பதிவகமானது, Red Hat Enterprise Linux 6 மற்றும் Red Hat Enterprise Linux 7 ஆகிய இரண்டிலும் பயன்பாடுகளைக் கட்டமைப்பதற்கான அடிப்படைப் படிமங்களையும் Red Hat Enterprise Linux 7.1 இல் Docker மூலம் பயன்படுத்தக்கூடிய முன்பே கட்டமைக்கப்பட்ட தீர்வுகளையும் வழங்குகிறது. பதிவகம் மற்றும் கிடைக்கும் தொகுப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, Docker படிமங்கள் என்பதைக் காண்க.

பாடம் 11. அங்கீகாரம் மற்றும் இடைசெயல் தன்மை

கைமுறை மறுபிரதி மற்றும் மீட்டெடுப்பு செயலம்சம்

இந்தப் புதுப்பிப்பில், அடையாள நிர்வாகத்திற்கான (IdM) ipa-backup மற்றும் ipa-restore ஆகிய கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதைக் கொண்டு பயனர்கள் தங்கள் IdM தரவை கைமுறையாக மறுபிரதி எடுக்கவும் வன்பொருள் செயலிழக்கும்பட்சத்தில் அதை மீட்டெடுத்துக்கொள்ளவும் முடியும்.. கூடுதல் தகவலுக்கு ipa-backup(1) மற்றும் ipa-restore(1) ஆகிய உதவிக்கையேட்டுப் பக்கங்களைப் பார்க்கவும் அல்லது தொடர்புடைய FreeIPA ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.

சான்றிதழ் அங்கீகார நிர்வாகக் கருவி

அடையாள நிர்வாக (IdM) கிளையனில் ipa-cacert-manage renew கட்டளை சேர்க்கப்பட்டுள்ளது, இதனால் IdM சான்றிதழ் அங்கீகரிப்புக் (CA) கோப்பைப் புதுப்பிப்பது சாத்தியமாகிறது. இதனால் பயனர்களால் வெளி CA கையொப்பமிட்ட ஒரு சான்றிதழைப் பயன்படுத்தி IdM ஐ நிறுவவும் நிர்வகிக்கவும் முடிகிறது. இந்த அம்சம் பற்றிய விவரங்களுக்கு ipa-cacert-manage(1) உதவிக்கையேட்டுப் பக்கத்தைப் பார்க்கவும் அல்லது தொடர்புடைய FreeIPA ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.

அதிகரிக்கப்பட்ட அணுகல் கட்டுப்பாட்டு தெளிவுத்தன்மை

இப்போது, அடையாள நிர்வாகச் (IdM) சேவையக இடைமுகத்தில், சில குறிப்பிட்ட பிரிவுகளின் வாசிப்பு அனுமதிகளை கட்டுப்படுத்த முடியும். இதனால் IdM சேவையக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே முக்கியமான உள்ளடக்கத்தை அணுகக் கிடைக்குமாறு கட்டுப்படுத்தலாம். அத்துடன் கூடுதலாக, இப்போது முன்னிருப்பாக, IdM சேவையகங்களின் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் அதன் அனைத்து உள்ளடக்கத்திற்கும் வாசிப்பு அனுமதி கொண்டிருப்பதில்லை. இந்த மாற்றங்களால் IdM சேவையகத் தரவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மேம்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு தொடர்புடைய FreeIPA ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.

சிறப்பனுமதியற்ற பயனர்களுக்கு வரம்புக்குட்பட்ட டொமைன் அணுகல்

pam_sss தொகுதிக்கூறில் domains= விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது, இது /etc/sssd/sssd.conf கோப்பில் உள்ள domains= விருப்பத்தை மீறி செயல்படும். அத்துடன், இந்தப் புதுப்பிப்பில் pam_trusted_users விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது, இதைக் கொண்டு SSSD டீமான் நம்பும் எண்களாலான UIDகள் அல்லது பயனர் பெயர்களின் பட்டியலைச் சேர்க்க முடியும். pam_public_domains விருப்பம் மற்றும் நம்பப்படாத பயனர்களும் அணுகக்கூடிய வகையில் இருக்கும் டொமைன்களின் ஒரு பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சங்களால், வழக்கமான பயனர்கள் குறிப்பிட்ட சில பயன்பாடுகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் அதே சமயம் கணினியில் புகுபதிகை செய்ய அனுமதி கொண்டிருக்காத வகையில் கணினிகளை அமைவாக்கம் செய்ய முடியும். இந்த அம்சம் குறித்து கூடுதல் தகவலுக்கு தொடர்புடைய SSSD ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.

பொது இணைய கோப்பு முறைமைக்கான SSSD ஒருங்கிணைப்பு

cifs-utils கருவி நிரல் ID-மேப்பிங் செயலை மேற்கொள்ளும்படியான அமைவாக்கத்தைச் செய்வதற்காக SSSD வழங்கும் ஒரு செருகுநிரல் இடைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இப்போது ஒரு SSSD கிளையனானது, Winbind சேவையை இயக்கும் கிளையனைப் போன்றே, CIFS பகிர்வை அணுக முடியும். கூடுதல் தகவலுக்கு தொடர்புடைய SSSD ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.

WinSync இலிருந்து Trust க்கு இடப்பெயர்ப்பு செய்வதற்கான ஆதரவு

இந்த புதுப்பிப்பில் பயனர் அமைவாக்கத்தின் புதிய ID காட்சிகள் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Active Directory பயன்படுத்தும் WinSync ஒத்திசைவு அடிப்படையிலான கட்டமைப்பிலிருந்து மொத்த பகுதி நம்பகங்காளின் அடிப்படையிலான கட்டமைப்புக்கு அடையாள நிர்வாகப் பயனர்களை இடப்பெயர்ப்பு செய்வது எளிதாகிறது. ID Views மற்றும் இடப்பெயர்ப்பு செயல்முறை பற்றிய விவரங்களுக்கு தொடர்புடைய FreeIPA ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.

தானியக்க தரவு வழங்குநர் அமைவாக்கம்

இப்போது ipa-client-install கட்டளையானது முன்னிருப்பாக, SSSD ஐ sudo சேவைக்கான தரவு வழங்குநராக அமைவாக்கம் செய்கிறது. --no-sudo விருப்பத்தைக் கொண்டு இந்த செயல்குணத்தை முடக்கலாம். அத்துடன், அடையாள நிர்வாக கிளையன் நிறுவலுக்கான NIS டொமைன் பெயரைக் குறிப்பிடுவதற்காக --nisdomain விருப்பமானது சேர்க்கப்பட்டுள்ளது, NIS டொமைன் பெயரை அமைப்பதைத் தவிர்க்க, --no_nisdomain விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு விருப்பங்களில் எதையும் பயன்படுத்தாவிட்டால், IPA டொமைன் பயன்படுத்தப்படும்.

AD மற்றும் LDAP sudo வழங்குநர்களின் பயன்பாடு

AD வழங்குநர் என்பது, செயல்மிகு கோப்பக சேவையகத்திற்கு இணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பின்புல முறைமையாகும். Red Hat Enterprise Linux 7.1 இல், AD sudo வழங்குநரை LDAP வழங்குநருடன் சேர்த்துப் பயன்படுத்துதல் தொழில்நுட்ப முன்னோட்டமாக ஆதரிக்கப்படுகிறது. AD sudo வழங்குநரை செயல்படுத்த, sssd.conf கோப்பின் டொமைன் பிரிவில் sudo_provider=ad அமைவை சேர்க்கவும்.

பாடம் 12. பாதுகாப்பு

SCAP Security Guide

பாதுகாப்பு வழிகாட்டலையும், அடிப்படைகளையும் அதனுடன் தொடர்புடைய செல்லுபடியாக்க இயங்கம்சங்களையும் வழங்குவதற்காக, Red Hat Enterprise Linux 7.1 இல் scap-security-guide தொகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்கள் பாதுகாப்பு உள்ளடக்க தன்னியக்க நெறிமுறை (SCAP) என்பதில் உள்ளது, இதுவே நடைமுறை கடினப்படுத்தல் அறிவுரைக்கான விவர அட்டவணையாகத் திகழ்கிறது. SCAP Security Guide பயன்பாடானது, பரிந்துரைக்கப்படும் பாதுகாப்புக் கொள்கைத் தேவைகள் தொடர்பாக, சிஸ்ட்டம் பாதுகாப்பு இணக்க ஸ்கேன்களைச் செய்வதற்குத் தேவையான தரவைக் கொண்டுள்ளது; எழுத்துவடிவிலான ஒரு விளக்கம் மற்றும் தன்னியக்கமாக்கப்பட்ட சோதனை (ப்ரோப்) ஆகிய இரண்டும் இதில் அடங்கும். சோதனை செய்யும் செயல் தன்னியக்கமாக்கப்படுவதால், SCAP Security Guide பயன்பாடானது, சிஸ்ட்டம் இணக்கத்தை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வதற்கான நம்பகமான வழியாக உள்ளது.
கணினியானது கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, Red Hat Enterprise Linux 7.1 கணினி நிர்வாகி openscap-utils தொகுப்பிலிருந்து oscap கட்டளைவரி கருவியைப் பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு scap-security-guide(8) கையேட்டுப் பக்கத்தைக் காண்க.

SELinux கொள்கை

Red Hat Enterprise Linux 7.1 இல், SELinux கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; இது அவற்றின் SELinux கொள்கையில்லாமலே செயல்படக்கூடியவையாக உள்ளன init_t இல் இயங்கிய, தனக்கென SELinux கொள்கையின்றி இருந்த சேவைகள் இப்போது, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள unconfined_service_t டொமைனில் இயங்குகின்றன. Red Hat Enterprise Linux 7.1 க்கான SELinux பயனர் மற்றும் நிர்வாகி வழிகாட்டியின் கட்டுப்படுத்தப்படாத செயல்முறைகள் பிரிவைக் காண்க.

OpenSSH இல் புதிய அம்சங்கள்

OpenSSH கருவிகளின் தொகுப்பானது பதிப்பு6.6.1p1-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன, இதனால் கிரிப்டோகிராஃபி தொடர்பான பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன:
  • இப்போது, டேனியல் பெர்ன்ஸ்டெயினின் Curve25519 இல், நீள்வட்ட வளைவு Diffie-Hellman ஆதரிக்கப்படுகிறது. இப்போது இந்த முறையினை ஆதரிக்கும் சேவையகம் மற்றும் கிளையன் இரண்டிலுமே இம்முறையே முன்னிருபு முறையாகும்.
  • Ed25519 நீள்வட்ட வளைவு கையொப்பத் திட்டத்தை பொது விசையாகப் பயன்படுத்துவதற்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. பயனர் மற்றும் ஹோஸ்ட் விசை என இரு வகையிலும் பயன்படுத்தக்கூடிய Ed25519 ஆனது ECDSA மற்றும் DSA ஆகியவற்றை விட சிறந்த பாதுகாப்பையும் வழங்குகின்றது, சிறப்பாகவும் செயல்படுகின்றது.
  • bcrypt விசை உருவாக்கச் செயலம்சத்தைப் (KDF) பயன்படுத்துகின்ற, புதிய தனிப்பட்ட விசை வடிவமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. முன்னிருப்பாக, Ed25519 விசைகளுக்காக இந்த வடிவமைப்பு பயன்படுத்தப்படும், பிற வகை விசைகளுக்கும் இது கோரப்படலாம்.
  • chacha20-poly1305@openssh.com எனும் புதிய டிரான்ஸ்போர்ட் சிஃபர் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் டேனியல் பெர்ன்ஸெயினின் ChaCha20 ஸ்ட்ரீம் சிஃபர் மற்றும் Poly1305 செய்தி அங்கீகரிப்புக் குறியீடு (MAC) ஆகிய இரண்டும் ஒருங்கே உள்ளது.

Libreswan இல் புதிய அம்சங்கள்

IPsec VPN -இன் Libreswan செயல்படுத்தலானது பதிப்பு 3.12-க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது, இது பல புதிய அம்சங்களையும் மேம்பாடுகளையும் வழங்குகிறது:
  • புதிய சிஃபர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • IKEv2 ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது (முக்கியமாக CP பேலோட்ஸ், CREATE_CHILD_SA கோரிக்கைகளுக்கு), மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மேற்குறிப்பு (AH) க்கான ஆதரவு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • IKEv1 மற்றும் IKEv2 இல் இடைநிலை சான்றிதழ் சங்கிலித் தொடர் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • இணைப்புக் கையாளுகை மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • OpenBSD, Cisco மற்றும் Android சிஸ்டம்ங்களுடன் இணங்கி செயல்படும் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • systemd support has been improved.
  • ஹேஷ் செய்யப்பட்ட CERTREQ மற்றும் டிராஃபிக் புள்ளிவிவரங்களுக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது

TNC இல் புதிய அம்சங்கள்

strongimcv தொகுப்பு வழங்குகின்ற, நம்பகமான பிணைய இணைப்பு (TNC) கட்டமைப்பானது புதுப்பிக்கப்பட்டுள்ளது, இப்போது அது strongSwan 5.2.0 அடிப்படையிலானது. TNC இல் பின்வரும் புதிய அம்சங்களும் மேம்படுத்தல்களும் சேர்க்கப்பட்டுள்ளன:
  • நம்பகமான பிணைய இணைப்புக்கான PT-EAP டிரான்ஸ்போர்ட் நெறிமுறை (RFC 7171) சேர்க்கப்பட்டுள்ளது.
  • IMC/IMV இணைக்கான சான்றொப்பமானது இப்போது IMA-NG அளவீட்டு வடிவமைப்பை ஆதரிக்கும்.
  • ஒரு புதிய TPMRA பணிப்பகுதியைச் செயல்படுத்துவதன் மூலம், சான்றொப்ப IMV ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • SWID IMV உடன் கூடிய JSON-அடிப்படையிலான REST APIக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது.
  • swidGenerator பயன்பாட்டைப் பயன்படுத்தி, dpkg, rpm அல்லது pacman தொகுப்பு நிர்வாகியிலிருந்து, நிறுவியுள்ள தொகுப்புகள் அனைத்தையும் SWID IMC ஆல் பிரித்தெடுக்க முடியும். இதனால் புதிய SWID டேகுகள் உருவாக்கப்படும்.
  • EAP-(T)TLS மற்றும் பிற நெறிமுறைகள் பயன்படுத்துகின்ற libtls TLS 1.2 செயல்படுத்தலானது, AEAD முறைமை ஆதரவுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது, தற்போது அது AES-GCM க்கு மட்டும் என்று வரம்பிடப்பட்டுள்ளது.
  • aikgen கருவியானது இப்போது TPM உடன் இணைந்துகொள்கின்ற ஒரு சான்றொப்ப அடையாள விசையை உற்பத்தி செய்கிறது.
  • ஒரு அணுகல் கோரிக்கைக்கான கோரிக்கையாளர் ஐடி, சாதன் ஆஇடி, தயாரிப்பு விவரங்கள் பகிர்வதற்கான அணுகலைப் பகிர்வதற்கான common imv_session பொருளின் வழியாக IMVs ஆதரவு மேம்படுத்தப்பட்டுள்ளது .
  • IF-TNCCS (PB-TNC, IF-M (PA-TNC)) நெறிமுறைகளிலும், OS IMC/IMV இணையிலும் தற்போதுள்ள பல வழுக்கள் தீர்க்கபப்ட்டுள்லன.

GnuTLS இல் புதிய அம்சங்கள்

SSL, TLS மற்றும் , DTLS ஆகிய நெறிமுறைகளும் பதிப்பு 3.3.8க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது. இது பல விதமான மேம்படுத்தல்களை அளிக்கிறது.
  • DTLS 1.2 -க்கான ஆதரவும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • பயன்பாட்டு அடுக்கு நெறிமுறை (ALPN) சேர்க்கப்பட்டுள்ளது.
  • நீள்வட்ட-வளைவு சிஃபரின் தொகுப்புகளின்.செயல்திறனானது மேம்படுத்தப்பட்டுள்ளது
  • RSA-PSK மற்றும் CAMELLIA-GCM ஆகிய புதிய சிஃபர் தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • நம்பகமான இயங்குதளக் கூறு (TPM) தரநிலை சேர்க்கபட்டுள்ளது.
  • PKCS#11 ஸ்மார்ட் கார்டுகள் மற்றும் வன்பொருள் பாதுகாப்புத் தொகுதிகளுக்கான (HSM) ஆனது பல விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
  • FIPS 140 பாதுகாப்புத் தரநிலைகளுடனான இணக்கத் தன்மையானது (ஃபெடரல் தகவல் செயலாக்கத் தரநிலைகள்) பல பணம் செலவழிக்கப்பட வேண்டும்.

பாடம் 13. டெஸ்க்டாப்

குவாட் பஃபர்டு OpenGL ஸ்டீரியோ விஷுவல்களுக்கான ஆதரவு

GNOME Shell மற்றும் Mutter தொகுப்புநிலை சாளர நிர்வாகி ஆகியவை இப்போது, ஆதரிக்கும் வன்பொருளில் குவாட் பஃபர்டு OpenGL ஸ்டீரியோ விஷுவல்களைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. இந்த அம்சத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கு NVIDIA டிஸ்ப்ளே இயக்கி பதிப்பு 337 அல்லது அதற்கு அடுத்த பதிப்பு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

ஆன்லைன் கணக்கு வழங்குநர்கள்

GNOME ஆன்லைன் கணக்குகள் பயன்பாட்டில் (gnome-online-accounts தொகுப்பு வழங்குவது) org.gnome.online-accounts.whitelisted-providers எனும் ஒரு புதிய GSettings விசை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விசை துவக்கத்தில் தனிப்பட்ட முறையில் ஏற்றப்படக்கூடிய ஆன்லைன் கணக்கு வழங்குநர்களின் ஒரு பட்டியலை வழங்குகிறது. இந்த விசையைக் குறிப்பிடுவதன் மூலம், கணினி நிர்வாகிக்ள் சரியான வழங்குநர்களைச் செயல்படுத்தலாம் அல்லது தேர்ந்தெடுத்தவற்றைத் தவிர்த்து மற்றதை முடக்கலாம்.

பாடம் 14. ஆதரிக்கக்கூடிய தன்மை மற்றும் பராமரிப்பு

ABRT அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோ அறிக்கையிடல்

Red Hat Enterprise Linux 7.1 இல், தானியக்க பிழை அறிக்கையிடும் கருவியானது (ABRT) Red Hat வாடிக்கையாளர் வலைவாசலுடனான நெருக்கமான ஒருங்கிணைப்பம்சம் கொண்டதாக உள்ளது, மேலும் இக்கருவியால் நேரடியாக வாடிக்கையாளர் வலைவாசலுக்கு மைக்ரோ அறிக்கைகளை அனுப்பவும் முடியும். இதனால் ABRT கருவி பயனர்களுக்கு ஒருங்கு சேகரிக்கப்பட்ட செயலிழப்புத் தகவலை வழங்க முடிகிறது. கூடுதலாக, ABRT கருவியில் மைக்ரோ அறிக்கைகளை அங்கீகரிப்பதற்கு உரிம சான்றிதழ்களைப் பயன்படுத்துதல் அல்லது வலைவாசல் சான்றளிப்புகளைப் பயன்படுத்துதல் என்ற இரு விருப்பங்களும் உள்ளன. இதனால் இந்த அம்சத்தை அமைவாக்கம் செய்வது எளிதாகிறது.
ஒருங்கிணைந்த அங்கீகரிப்பின் காரணமாக, ஒரு மைக்ரோ அறிக்கைக்கு உயர் உரை மூலம் பதிலளிக்க ABRT கருவியை அனுமதிக்கிறது, இந்தப் பதில் உரையில் மைக்ரோ அறிக்கைக்குக் காரணமான சிக்கலைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளும் இருக்கலாம். மைக்ரோ அறிக்கைகள் தொடர்பான முக்கியமான புதுப்பித்தல் பற்றிய அறிவிப்புகளச் செயல்படுத்தவும் இந்த அங்கீகரிப்பைப் பயன்படுத்தலாம். இந்த அறிவிப்புகளை நேரடியாக நிர்வாகிகளைச் சென்றடையும் படியும் அமைக்க முடியும்.
Red Hat Enterprise Linux 7.0 இல் ABRT மைக்ரோ அறிக்கைகள் அம்சத்தை ஏற்கனவே இயக்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோ அறிக்கையிடல் அம்சமானது முன்னிருப்பாக இயக்கப்பட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்க.
இந்த அம்சம் குறித்த கூடுதல் தகவலுக்கு வாடிக்கையாளர் வலைவாசலைப் பார்க்கவும்.

பாடம் 15. Red Hat மென்பொருள் தொகுப்புகள்

Red Hat மென்பொருள் தொகுப்புகள் என்பது, AMD64 மற்றும் Intel 64 கட்டமைப்புகளில் ஆதரிக்கப்படும் அனைத்து Red Hat Enterprise Linux 6 மற்றும் Red Hat Enterprise Linux 7 வெளியீடுகளிலும் நீங்கள் நிறுவி, பயன்படுத்தக்கூடிய செயல்மிகு நிரலாக்க மொழிகள், தரவுத்தள சேவையகங்கள் மற்றும் தொடர்புடைய தொகுப்புகள் ஆகியவற்றின் Red Hat உள்ளடக்கத் தொகுப்பாகும்.
Red Hat மென்பொருள் தொகுப்புகளுடன் விநியோகிக்கப்படும் செயல்மிகு மொழிகள், தரவுத்தள சேவையகங்கள் மற்றும் பிற கருவிகள் ஆகியவை Red Hat Enterprise Linux உடன் வழங்கப்படும் முன்னிருப்பு கணினிக் கருவிகளை இடமாற்றம் செய்யாது, அவற்றுக்குப் பதிலாக முன்னுரிமை கொடுத்தும் பயன்படுத்தப்படாது.
Red Hat மென்பொருள் தொகுப்புகள், தொகுப்புகளின் இணையான தொகுப்பை வழங்குவதற்காக, scl கருவியின் அடிப்படையிலான ஒரு மாற்று தொகுப்பாக்க செயலம்சத்தைப் பயன்படுத்துகிறது. இந்தத் தொகுப்பானது Red Hat Enterprise Linux இல் மாற்றுத் தொகுப்பு பதிப்புகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. scl கருவியைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் இயக்க விரும்பும் பயன்பாட்டுத் தொகுப்பின் பதிப்பை அவர்களே எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும்.

முக்கியம்

Red Hat மென்பொருள் தொகுப்பின் செல்லுபடிக்காலமும் ஆதரவுக் கால அளவும் Red Hat Enterprise Linux ஐ விடக் குறைவாகும். கூடுதல் தகவலுக்கு Red Hat மென்பொருள் தொகுப்புகள் தயாரிப்பு வாழ்க்கைச் சுழற்சியைப் பார்க்கவும்.
இப்போது Red Hat டெவலப்பர் கருவித்தொகுப்பு Red Hat மென்பொருள் தொகுப்புகளின் பகுதியாகும், அது ஒரு தனி மென்பொருள் தொகுப்பாக சேர்த்து வழங்கப்படுகிறது. Red Hat டெவலப்பர் கருவித்தொகுப்பானது Red Hat Enterprise Linux இயங்குதளத்தில் பணிபுரியும் டெவலப்பர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. அது GNU கம்பைலர் கலெக்ஷன், GNU டீபகர், எக்லிப்ஸ் டெவலப்மென்ட் இயங்குதளம் மற்றும் பிற டெவலப்மென்ட், வழுத்திருத்தம் மற்றும் செயல்திறன் கண்காணிப்புக் கருவிகளின் சமீபத்திய பதிப்புகளை வழங்குகிறது.
தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள கூறுகள், கணினி தேவைகள், அறிந்த சிக்கல்கள், பயன்பாடு மற்றும் தனிப்பட்ட மென்பொருள் தொகுப்புகளின் விவரக்குறிப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு Red Hat மென்பொருள் தொகுப்புகள் ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.
இந்த மென்பொருள் தொகுப்பில் உள்ள கூறுகள், நிறுவல், பயன்பாடு, அறிந்த சிக்கல்கள் இன்னும் பல கூடுதல் தகவல்களுக்கு Red Hat டெவலப்பர் கருவித்தொகுப்பு ஆவணமாக்கத்தைப் பார்க்கவும்.

பகுதி II. சாதன இயக்கிகள்

இந்தப் பிரிவில், Red Hat Enterprise Linux 7.1 இல் புதுப்பிக்கப்பட்டுள்ள சாதன இயக்கிகள் அனைத்தையும் கொண்ட விரிவான பட்டியல் வழங்கப்படுகிறது.

பாடம் 16. சேமிப்பக இயக்கி புதுப்பிப்புகள்

  • hpsa இயக்கியானது பதிப்பு 3.4.4-1-RH1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • qla2xxx இயக்கியானது பதிப்பு 8. 07.00.08.07.1-k1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • qla4xxx இயக்கியானது பதிப்பு 5.04.00.04.07.01-k0 -க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • qlcnic இயக்கியானது பதிப்பு 5.3.61 -க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • netxen_nic இயக்கியானது பதிப்பு 4.0.82-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • qlge இயக்கியானது பதிப்பு 1.00.00.34-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • bnx2fc இயக்கியானது பதிப்பு 2.4.2-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • bnx2i இயக்கியானது பதிப்பு 2.7.10.1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • cnic இயக்கியானது பதிப்பு 2.5.20-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • bnx2x இயக்கியானது பதிப்பு 1.710.51-0-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • bnx2 இயக்கியானது பதிப்பு 2.2.5-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • megaraid_sas இயக்கியானது பதிப்பு 06.805.06.01-rc1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • mpt2sas இயக்கியானது பதிப்பு 18.100.00.00-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • ipr இயக்கியானது பதிப்பு 2.6.0-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • Red Hat Enterprise Linux 7 இல் kmod-lpfc தொகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன, இந்தத் தொகுப்புகள் ஃபைபர் சேனல் (FC) மற்றும் ஃபைபர் சேனல் ஓவர் ஈத்தர்நெட் (FCoE) அடாப்ட்டர்களுடன் lpfc ஐப் பயன்படுத்தும் போது சிறந்த நிலைத்தன்மையை வழங்குகின்றன. lpfc இயக்கியானது பதிப்பு 0:10.2.8021.1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • be2iscsi இயக்கியானது பதிப்பு 10.4.74.0r-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • nvme இயக்கியானது பதிப்பு 0.9-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

பாடம் 17. பிணைய இயக்கி புதுப்பிப்புகள்

  • bna இயக்கியானது பதிப்பு 3.2.23.0r-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • cxgb3 இயக்கியானது பதிப்பு 1.1.5-ko-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • cxgb3i இயக்கியானது பதிப்பு 2.0.0-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • iw_cxgb3 இயக்கியானது பதிப்பு 1.1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • cxgb4 இயக்கியானது பதிப்பு 2.0.0-ko-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • cxgb4vf இயக்கியானது பதிப்பு 2.0.0-ko-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • cxgb4i இயக்கியானது பதிப்பு 0.9.4-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • iw_cxgb4 இயக்கியானது பதிப்பு 0.1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • e1000e இயக்கியானது பதிப்பு 2.3.2-k-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • igb இயக்கியானது பதிப்பு 5.2.13-k-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • igbvf இயக்கியானது பதிப்பு 2.0.2-k-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • ixgbe இயக்கியானது பதிப்பு 3.19.1-k-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • ixgbevf இயக்கியானது பதிப்பு 2.12.1-k-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • i40e இயக்கியானது பதிப்பு 1.0.11-k-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • i40evf இயக்கியானது பதிப்பு 1.0.1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • e1000 இயக்கியானது பதிப்பு 7.3.21-k8-NAPI-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • mlx4_en இயக்கியானது பதிப்பு 2.2-1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • mlx4_ib இயக்கியானது பதிப்பு 2.2-1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • mlx5_core இயக்கியானது பதிப்பு 2.2-1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • mlx5_ib இயக்கியானது பதிப்பு 2.2-1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • ocrdma இயக்கியானது பதிப்பு 10.2.287.0u-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • ib_ipoib இயக்கியானது பதிப்பு 1.0.0-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • ib_qib இயக்கியானது பதிப்பு 1.11-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • enic இயக்கியானது பதிப்பு 2.1.1-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.67.
  • be2net இயக்கியானது பதிப்பு 10.4r-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • tg3 இயக்கியானது பதிப்பு 3.137-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.
  • r8169 இயக்கியானது பதிப்பு 2.3LK-NAPI-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

பாடம் 18. கிராஃபிக்ஸ் இயக்கி புதுப்பிப்புகள்

  • vmwgfx இயக்கியானது பதிப்பு 2.6.0.0-க்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது.

மீள்பார்வைவரலாறு

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 1.0-9Wed Jan 14 2015மிலன் நவ்ராட்டில்
Red Hat Enterprise Linux 7.1 வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு.
மீள்பார்வை 1.0-9Wed Jan 14 2015Milan Navrátil
Release of the Red Hat Enterprise Linux 7.1 Release Notes.
மீள்பார்வை 1.0-8Thu Dec 15 2014ஜிர்ரி ஹெர்மேன்
Red Hat Enterprise Linux 7.1 Beta வெளியீட்டுக் குறிப்புகளின் வெளியீடு.
மீள்பார்வை 1.0-8Thu Dec 15 2014Jiří Herrmann
Release of the Red Hat Enterprise Linux 7.1 Beta Release Notes.